ஒன்றா ரெண்டா ஆசைகள்! ரெட்ரோ கெடக்குது! ஜோதிகாவுடன் சீஷெல்ஸ்ல் சூர்யா ரொமான்ஸ்! வீடியோவை பாருங்க!
சென்னை: சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்த படத்துக்கு தயாராகி வரும் நடிகர் சூர்யா கிடைத்த இடைவெளியை மனைவி ஜோதிகாவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். புகழ்பெற்ற சீஷெல்ஸ் தீவில் விடுமுறையை கழிக்கும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
மிகப் பிரபலமான சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் எம்ஜிஆர் காலத்திலேயே நடிகராக பிரபலமானவர். தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான சூர்யா, ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், இன்று உழைப்பால் மிகப்பெரிய நாயகனாக உயர்ந்து இருக்கிறார்.
பாலாவின் நந்தா திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. அதற்குப் பிறகு காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இடையில் ஓடிடியில் வெளியான சூறரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அஞ்சானில் தொடங்கி சிங்கம் 3, என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ என அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.
கடந்த சில மாதங்களாகவே மும்பையில் தங்கி இருக்கும் சூர்யா ஜோதிகா ஜோடி தற்போது விடுமுறையை கழிப்பதற்காக கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக அழகிய தீவுகளில் ஒன்றான சீஷெல்ஸ் தீவுக்கு சென்று இருக்கின்றனர். கண்ணாடி போல கடற்கரைகள், மலை முகடுகளை ரசித்துப் பார்த்தபடி இருவரும் சுற்றிப் பார்க்கும் வீடியோக்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 'சொர்க்கத்தில் இன்னொரு நாள் நாம் இருவரும்' என்ற கேப்ஷனோடு பதிவிட்டு இருக்கும் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். அடுத்ததாக லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்திலும் நடிக்கிறார். இதில் சூர்யாவுடன், ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications