செஸ் ஒலிம்பியாட் நாயகனான குதிரை சின்னம்.. ’தம்பி’ பெயருக்கு அண்ணாவே காரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தின் மாபெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, எல்லோரையும் தம்பி என்றுதான் அழைப்பார். அதனால் தான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாக ஒரு சர்வதேச விளையாட்டு தொடர் நடத்தப்பட்டால், அதனை பிரபலபடுத்தும் வகையில் பிரத்யேகமான சின்னம் உருவாக்கப்படுவது வழக்கம். அந்த சின்னம் வாயிலாக மக்கள் மத்தியில் அந்த விளையாட்டு பிரபலப்படுத்தப்படும். அப்படி சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சின்னம் தான் தம்பி.

செஸ் விளையாட்டில் வெல்ல முக்கிய காய்-ஆக இருக்கும் குதிரையை மையப்படுத்தி, அதற்கு தமிழர் கலாச்சாரமான வேட்டி, சட்டை அணிவித்து, வணக்கம் சொல்லுவது போல் பிரத்யேக சின்னமாக உருவாக்கப்பட்டது. அதேபோல் மக்கள் மத்தியில் அந்த சின்னத்தை எளிதில் கொண்டு செல்லும் வகையில் தம்பி என்று அந்த சின்னத்திற்கு பெயர் வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தம்பி குதிரை சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது. விநாயகர் சிலையைப் போல் மனித உடலில் குதிரை தலையை பொறுத்தி அதற்கு வேட்டி சட்டை அணிந்தது மக்களை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சுவர் விளம்பரமாக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சர்வதேச செஸ் வீரர்கள் உட்பட அனைவரையும் செல்ஃபி எடுத்துக்கொள்ளத் தூண்டும் இந்த தம்பி குதிரை சிலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் சின்னத்துக்கு 'தம்பி' என பெயரிட்டிருக்கிறோம். சகோதரத்துவத்தின் அடையாளமாக பெயரை சூட்டியிருக்கிறோம். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்பதே இதன் பொருள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், எல்லோரையும் தம்பி என்றுதான் அழைப்பார் என்று விளக்கமளித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தம்பி சின்னம் மூலமாக தமிழ் கலாச்சாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்றதோடு, தமிழ் பண்பாடான அனைவரும் ஒருதாய் மக்கள் என்று கூறி தமிழையும் அனைத்து மக்கள் மத்தியில் அரசு கொண்டு சென்றுள்ளது. தமிழக அரசின் செஸ் போட்டிகளுக்கான செயல்பாடுகள் இனி வருங்காலங்கள் இந்தியாவில் நடைபெறும் விழாவுக்கு ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கப் போவது நிச்சயம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications