Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மில்கி பியூட்டி" தமன்னா கேரவனுக்குள் புகுந்து..சில்மிஷம் செய்த தென்னிந்திய நடிகர்! அவரா இருக்குமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட்டில் அறிமுகமாகி ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்போது பான் இந்தியா நடிகையாக வளம் வருபவர் தமன்னா'"மில்கி பியூட்டி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தமன்னா. இந்நிலையில், ஆரம்பத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார். மேலும் தொடக்க காலத்தில் சினிமாவில் பல கசப்பான அனுபவங்களை தான் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

இப்போதைக்கு இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகையாக தமன்னா இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டு இந்த துறைக்கு வந்தார். தமன்னா பாட்டியா என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்.

அடுத்த ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. தொடர்ந்து சில ஆண்டு இடைவெளியில் காணாமல் போன அவர் கல்லூரி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

Tamannaah cinema chennai

அதற்கு பிறகு அவரது கேரியர் சர்ரென உயர்ந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமன்னாவை தங்கள் படங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து பையா, சுறா, அயன், படிக்காதவன், கண்டேன் காதலை, தில்லாலங்கடி என பல படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இடையில் காணாமல் போன அவர் மீண்டும் கத்தி சண்டை, தர்மதுரை, அரண்மனை 4, ஜெயிலர் உள்ளிட்ட படங்களின் நடித்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ரவி மோகன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணிக்கு வந்தார். அதற்கு பிறகு பாகுபலி திரைப்படம் தேசிய அளவில் தமன்னாவுக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் சில படங்கள்ல் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருந்தாலும் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே அந்த பாடல்கள் ஹிட் அடித்தன. உதாரணத்திற்கு 'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலை சொல்லலாம்.

இடையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடன் அவர் காதலில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் தமன்னா அது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சிறுவயதில் இருந்தே சினிமாவில் தான் மிகவும் சிரமப்பட்டு வந்தாகவும் சில நடிகர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார் தமன்னா. தென்னிந்தியாவின் ஒரு மொழி படத்தில் முன்னணி நடிகர் ஒருவருடன் நடித்த போது அவர் தனது கேராவனுக்குள் வந்து தவறாக நடந்து கொண்டதாகவும், அது தனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது எனக் கூறியிருக்கிறார் தமன்னா.

மேலும் தன்னிடம் அந்த நடிகர் கொஞ்சம் எல்லை மீறி நடக்க தொடங்கிய நிலையில் அவரது செயல் தனக்கு சங்கடத்தை கொடுத்ததாகவும், இதுபோன்று தொல்லை செய்தால் இனிமேல் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி வெளியேறி இருக்கிறார் தமன்னா. இதனையடுத்து தனது செயலுக்கு அந்த நடிகர் வருத்தம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டதால் அந்த படத்தில் தொடர்ந்து நடித்ததாகவும் இது போன்ற பல கசப்பான அனுபவங்களை தான் சந்தித்ததாக கூறுகிறார்.

தமிழில் மட்டும் அல்ல தெலுங்கிலும் ஆரம்பத்தில் தமன்னா பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நிலையில் அத்துமீறிய அந்த நடிகர் யார் என்பது குறித்து ரசிகர்கள் தேடி வருகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகர் என பொதுவாக தமன்னா, குறிப்பிட்டதால் பல ரசிகர்களும் இந்த நடிகராய் தான் இருப்பார் என சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+