நாராயணசாமி நாயுடு! விவசாயிகள் மோடியை வென்றதன் பின்னணியில் ஒரு தமிழக கனெக்சன்!
சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேச தேர்தல், பஞ்சாப் தேர்தல் என இந்த வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாரதிய கிஷான் யூனியன் நடத்திய போராட்டம் தான் மோடியை பணிய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் வேளாண் திருத்த மசோதாக்கள் சட்டமாகின. இந்த சட்டம் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இல்லாமல் ஆக்கிவிடும் என்று முதலில் பஞ்சாப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பின்னர் ஹரியானா விவசாயிகள் போர்க்குரல் எழுப்பினர். டெல்லியை நோக்கி இரு மாநில விவசாயிகளும் டிராக்டரில் படையெடுத்தனர். டெல்லி முற்றுகையிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாரதிய கிஷான் யூனியன் விவசாயிகள் போராட்டத்தில் களம் இறங்கியது.

கடந்த ஜனவரி மாதம் 26ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியல் விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனை அடுத்து பஞ்சாப், ஹிரியானாவை சேர்ந்த விவசாய சங்கங்கள் பல, போராட்டத்தில் இருந்து பின்வாங்கின. இதனால் கிட்டத்தட்ட விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் டெல்லி காஸியாபாத் எல்லையில் முகாம் அமைத்து பாரதிய கிஷான் யூனியன் போராட்டத்தை தொடர்ந்தது. அந்த அமைப்பின் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் செய்தி தொடர்பான ராகேஷ் திகாயத் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்ணனான நரேஷ் திகாயத் உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்து விவசாயிகளை திரட்டி டெல்லி எல்லைக்கு அனுப்பி வைத்தார். இதே போல் தம்பியான ராகேஷ் திகாயத் காஸியாபாத் எல்லையில் முகாம் அமைத்து விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் குளிர், மழை, வெயில் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் நடைபெற்றது. போலீசார் போராட்ட முகாமுக்குள் புகுந்து பலரை கைது செய்த போதும் ராகேஷ் திகாயத்தை நெருங்க முடியவில்லை. தன்னுடைய உயிரே போனாலும் போராட்ட களத்தை விட்டு நகரப்போவதில்லை என ஊடகங்கள் முன்னால் திகாயத் கதறி அழுதார்.
திகாயத்தின் இந்த அழுகை தான் போராட்டத்தின் டர்னிங் பாய்ன்ட். அப்போது முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் மராத்தான் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் வெற்றி அடைந்து சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த வகையில் விவசாயிகளின் இந்த போராட்டம் வெற்றி பெற, உத்தரபிரதேசத்தின் பிகேயு எனப்படும் பாரதிய கிஷான் யூனியன் முக்கிய காரணமாகியுள்ளது. இந்த விவசாய அமைப்பு தொடங்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த விவசாயபோராளி நாராயணசாமி நாயுடு தான்.
1950களில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களை தொடங்கியர் நாராயணசாமி நாயுடு. கோவை மாவட்டம் செங்காளிபாளையத்தை சேர்ந்த இவர் நடத்திய போராட்டங்களால் அப்போது தமிழ்நாடே ஸ்தம்பித்துப்போனது. விவசாயிகளுக்கான மின்சார விநியோக நேரத்தை தமிழக அரசு அப்போது 4 மணி நேரமாக குறைத்ததற்கு எதிராக நாராயணசாமி நடத்திய போராட்டத்தால் தமிழக அரசே இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் பிறகு மறுபடியும் விவசாயிகளுக்கான மின்சார விநியோக நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
இப்படி தமிழக அளவில் போராடிக் கொண்டிருந்த நாராயணசாமி நாயுடு பிறகு கர்நாடகாவில் நஞ்சுண்டசாமி, உத்தரபிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத் போன்றோரை ஒன்று சேர்த்து சவுத்ரி சரண் சிங் தலைமையில் அகில இந்திய அளவில் விவசாய சங்கத்தை கட்டமைத்தார். அந்த விவசாய சங்கம் தான் பிகேயு அதாவது பாரதிய கிஷான் யூனியன் என்று அமைக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் நிறுவனர்கள் பெயர் பட்டியலில் தற்போதும் நாராயணசாமி நாயுடு பெயர் உள்ளது. அந்த வகையில் தற்போது விவசாயிகள் போராட்டம் வென்றதில் தமிழகத்தை சேர்ந்த நாராயணசாமி நாயுடு முயற்சியில் உருவான பாரதிய கிஷான் யூனியன் பங்கெடுத்திருப்பது கிட்டத்தட்ட தமிழகமே பங்கெடுத்தது போன்றது தான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications