சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை...முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் - சத்யபிரதா சாகு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளன. அவற்றை எதுவும் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி பிரமுகர்களும் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள் 14.44 கோடி பேர் பாதிப்பு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள் 14.44 கோடி பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை எப்படி சுமுகமாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துடனும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார். நேற்யை தினம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.

வாக்கு எண்ணிக்கை எப்படி

வாக்கு எண்ணிக்கை எப்படி

வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் விசாலமான பரப்பளவை கொண்டவையாகவே உள்ளன. இதனால் வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் வரை போட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வாக்குச்சாவடி அதிகம் உள்ள தொகுதிகளை கருத்தில் கொண்டு கூடுதலாக மேஜைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மேஜைகள்

வாக்கு எண்ணிக்கை மேஜைகள்

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க 6 அடி இடைவெளி அவசியம். 6 அடி இடைவெளியில் ஒவ்வொரு மேஜையையும் அமைப்பது சிக்கலாக இருக்கும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் வாக்கு எண்ணிக்கை மேஜைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள்

தடுப்பு நடவடிக்கைகள்

வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்கள் மற்றும் ஒவ்வொரு மேஜையிலும் உள்ள அவர்களது முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமா?, எத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகள்

வாக்கு எண்ணும் பணிகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மருத்துவ குழுவுடன் ஆலோசித்து வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை இறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தின் சூழல், கொரோனா பாதிப்பு நிலவரம் போன்றவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கே நன்கு தெரியும் என்பதால், அவர்களின் கருத்துகள் கோரப்படுகின்றன. அந்த கருத்துகளின் அடிப்படையிலேயே வாக்கு எண்ணும் பணிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் பணிகள் சுமுகமாக நடைபெற வேண்டும். அதேவேளையில், வாக்கு எண்ணிக்கையால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதில் தமிழக தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளன. அவற்றை எதுவும் செய்ய முடியாது.

அரசியல் கட்சியினர் புகார்கள்

அரசியல் கட்சியினர் புகார்கள்

கன்டெய்னர்கள் உள்ளே நுழைந்ததாகவும், மர்ம நபர்கள் சென்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தன. எந்தெந்த இடங்களில் இருந்து புகார் வந்ததோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டன. இதன்படி எந்த இடத்திலும் முறைகேடான சம்பவங்கள் நடக்கவில்லை.

யாரும் நுழையவில்லை

யாரும் நுழையவில்லை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் தமிழக போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக நடமாடும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நடமாடும் கழிப்பறை வசதி கொண்ட வாகனங்களை மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்குள் நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முடிவுகள் வெளியாக தாமதம்

முடிவுகள் வெளியாக தாமதம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டிடங்களில் ரகசியமாக கன்டெய்னர் உள்ளிட்ட வாகனங்களோ, நபர்களோ நுழையவில்லை. எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை முடிந்து நள்ளிரவு 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேஜைகளை குறைக்கக் கூடாது என்று அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tamil Nadu Chief Electoral Officer Satyaprada Sagu has said that the counting of votes will take place as planned and the results will be released on May 2 by 12 midnight. A night curfew and a full-time curfew have been imposed to prevent the spread of corona. Satya Pradhan Sagu said the curfew would not affect the turnout.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X