சென்னை.. குப்பையை அகற்றி, போட்டோ எடுத்ததும், அங்கேயே மூட்டையை விட்டு சென்றதாக சர்ச்சை: பாஜக விளக்கம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூய்மை பாரதம் திட்டத்திற்கு ரொம்பவே முக்கியத்துவம் தருபவர் நரேந்திர மோடி. எனவே, அவரது பிறந்தநாள் தினத்தன்று, கடற்கரையை தூய்மைப்படுத்துவதன் மூலமாக மக்களுக்கு மெசேஜ் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது.

போஸ் கொடுத்து போனதாக குற்றச்சாட்டு
ஆனால், இந்த நிகழ்ச்சியின்போது கடற்கரையில் இருந்த குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அள்ளிவிட்டு அங்கேயே விட்டுச் செல்லப்பட்டு விட்டதாக சில படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு கழிவுகளை அகற்றாமல் அங்கேயே வைத்து விட்டார்கள் என்று அந்த புகைப்படங்களை வெளியிட்டவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

விமர்சனங்கள்
தூய்மை பாரதம் என்ற திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளின்போது இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களில் இது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல இங்கும் குப்பைகளை அப்படியே விட்டு விட்டதாக சிலர் விமர்சனம் செய்தனர்.

பாஜக மறுப்பு
ஆனால், இதை தமிழ்நாடு பாஜக இளைஞர் பிரிவு தலைவர் வினோஜ் செல்வம் மறுத்துள்ளார். குப்பை சேகரிக்கப்பட்ட அனைத்து பேக்களும் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார் வினோஜ் செல்வம்.

வினோஜ் செல்வம் ட்வீட்
கடற்கரையோரத்தில் உள்ள குப்பை சேகரித்த பிறகு அங்கிருந்த மீனவர்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடும் சமயத்தில் எப்போதும் பாஜகவை குறை சொல்லும் நோக்கோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பதிவு இது!அனைத்து பைகளும் எங்கள் நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

என்ன விஷயம்
குப்பை மூட்டையாக கட்டப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலகட்டம் வரை அங்கேயே இருந்ததால், அந்த புகைப்படம் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து குப்பை அங்கேயே இருக்கவில்லை. அதை நாங்கள் அகற்றி விட்டோம் என்பது பாஜக தரப்பு வாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications