நாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும். மகளிருக்கு மாதம் ரூ.1000உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.

புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
கடந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி, அதிமுக அரசுதனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாத்தியமான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்கள் நடைபெறும்
இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மார்ச்18-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அன்று அலுவல்ஆய்வுக்குழு கூடி, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்,கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க. ஸ்டாலின்
இதற்கிடையே, இம்மாதம் 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. அப்போது, மாதந்தோறும் மின்கட்டண முறையைஅமல்படுத்துவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அதை அமல்படுத்தினால் இழப்பு ஏற்படுமா என்றும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதேபோல், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்அறிவித்திருந்தார். இவை தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்
திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல்முறையாக தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டுதாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications