சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கங்களை சாய்த்த கொரோனா.. நேரடியாக களமிறங்கிய முதல்வர்.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீர் ஆய்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீரெனெ ஆய்வு மேற்கொண்டார்.

Recommended Video

    நேரடியாக களமிறங்கிய முதல்வர் stalin உயிரியல் பூங்காவில் திடீர் ஆய்வு |Oneindia Tamil

    மனிதர்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்திய கொரோனா வைரஸ் இப்போது விலங்குகளையும் தாக்க தொடங்கி விட்டது.

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டு அதில் ஒரு சிங்கம் பலியாதனாத பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்தது.

    11 சிங்கங்களுக்கு கொரோனா

    11 சிங்கங்களுக்கு கொரோனா

    11 சிங்கங்கள் கடந்த சில நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல் தொடர் இருமல் போன்றவற்றால் அவதிபட்டுள்ளன. இதனால் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களின் மூக்கு மற்றும் ஆசன வாய் மாதிரிகளை மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், இரத்த மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழகத்திற்கும் அனுப்பினர்.

    ஒரு சிங்கம் உயிரிழப்பு

    ஒரு சிங்கம் உயிரிழப்பு

    இதனிடையே மூன்றாம் தேதி நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் மூக்கில் திரவம் சுரந்து பலியானது. பின்னர் ஆய்வு முடிவுகளில் 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியபட்டது. அதன் பின்னர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சிங்கங்களை பரிசோதித்தனர். இது தவிர அங்குள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட அணைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    மாத்திரை வழங்கப்பட்டன

    மாத்திரை வழங்கப்பட்டன

    விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொற்று ஏற்பட்ட சிங்கங்களை தனி அறையில் வைக்கவும் அதனை சிசிடிவி கேமரா காட்சி மூலமாக பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் திடீரெனெ ஆய்வு மேற்கொண்டார்.

    முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    பேட்டரி காரில் சென்று சிங்கங்கள் பராமரிக்கப்படும் இடங்கள், மற்ற விலங்குகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சிங்கங்களையும் முதல்வர் பார்வையிட்டார். கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்த பணிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    English summary
    Tamil Nadu Chief Minister MK Stalin made a surprise visit to the Vandalur zoo
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X