எல்லாம் எலக்ட்ரிக் மயம்.. மினுமினுக்கப் போகுதே சென்னை எம்டிசி! முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!
சென்னை: உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்டிசி சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தின நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவையும் மின்சார ரயில் சேவையும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தான். அந்த வகையில் அரசு பேருந்துகள் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. நாளொன்றுக்கு 2500 பேருந்துகள் சென்னை நகரில் சாலைகளில் பயணிக்கின்றன. இவற்றில் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பான அறிவிப்பில்,"மாநகர் போக்குவரத்துக் கழகத்தை (MTC) உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (CCP) செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு இடையே 20.10.2023 அன்று பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் (Public Transport Service Contract PTSC) கையெழுத்தானது. இதன்மூலம், பேருந்து இயக்கத்தில் முக்கிய செயல்திறன் குறியீடுகளை (Key Performance Indicators (KPI) உறுதி செய்து, அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ப வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும்.
பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தின்படி முதலாவது ஆண்டு 2023- 2024-இல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 10 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.21.50 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது ஆண்டு 2024 - 2025-இல் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஒப்பந்தத்தின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக (VGF) ரூ.300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ரூ.111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, 500 மின்சாரப் பேருந்துகளுடன், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கப்படவுள்ளது. இப்பேருந்துகள் பெரம்பூர்-II. தண்டையார்பேட்டை-I, வியாசர்பாடி, பூவிருந்தவல்லி, கலைஞர் நகர்-| மற்றும் பெரும்பாக்கம்- ஆகிய 6 பணிமனைகள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி பணிமனைகளில் இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை கலைஞர் நகர்-II. பெரும்பாக்கம்-II. குரோம்பேட்டை-III மற்றும் செம்மஞ்சேரி ஆகிய புதிதாக உருவாக்கப்படவுள்ள 4 பணிமனைகள் மற்றும் தற்பொழுது இயங்கி வரும் தண்டையார்பேட்டை-II பணிமனைகளில் மாற்றுவதற்கு தகுந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, 500 மின்சாரப் பேருந்துகள் சிறந்த முறையில் இயக்கப்படும். மேலும், மின்சாரப் பேருந்துகளை இயக்குவதால் எரிபொருள் செலவு குறைவதுடன், காற்று மாசுபாடு குறையும். இப்புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் மற்றும் டீசல் பேருந்துகளை மாற்றப்படவுள்ள 5 பணிமனைகளில் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications