டெல்லிக்கு பறந்த புகார்கள்! கேஎஸ் அழகிரிக்கு எதிராக களமிறங்கிய மூத்த தலைகள்! மாற்றம் வரப் போகுதாமே!
சென்னை : கட்சி அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே பா,சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனித்தனி அணிகளாகவே செயல்பட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் கோஷ்டி மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது.

கைகலப்பு
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில், திடீரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய மூன்று பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். மேலும் தன்னிடம் பேச வந்த நிர்வாகிகள் அழகிரி பளார் என அறைந்தார்.

கோஷ்டி மோதல்
இந்த மோதல் தொடர்பாக தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் இ வி கே எஸ் இளங்கோவன் கே வி தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசி அவர்கள் தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி மோதல் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருக்கின்றனர்.

விரைவில் மாற்றம்
கட்சி அலுவலகத்தில் தாக்குதல், அதன் பின்னணி, தொண்டர்களை கன்னத்தில் அறைந்தது, கேஎஸ் அழகிரியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்ததாகவும் அவரை மாற்ற வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. அமைதியாக இருந்த காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல் தலை தூக்கி அவருக்கு எதிராக தலைவர்கள் புகார் அளித்திருப்பது பரபரப்பை கூட்டி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் மோதல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தலைவர் மாற்றம்
கார்கேவுடனான சந்திப்பின் போது மாநிலத் தலைவர் மாற்றம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர். இதை மேலிடம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், மாநிலத் தலைவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.டெல்லி சென்ற தலைவர்களின் குழுவிற்கு உடனடி சாதக பதில் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வாய்ப்பில்லை
ஆனால், கோஷ்டி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸில், மூன்றாண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள மாநிலத் தலைவரை மாற்றக்கோருவதும் அதற்காக டெல்லி வரை சென்று மேலிடத்தில் முறையிடுவதும் சகஜம்தான். எனவே, மாநிலத் தலைவரை மாற்ற தற்போதும், அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். மாநிலத் தலைவர் மாற்றம் இப்போது இல்லை. அதற்கான தேவையும் இல்லை என்று கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

காய்நகர்த்து தலைகள்
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு மாற்றம் இருக்கும் அது மாநிலத் தலைவர் மாற்றமாகவும் இருக்கலாம் எனவும், புதிய தலைவர் பெயரில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சில எம்பிக்களின் பெயர்களும் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இது பரிசீலணையில் மட்டுமே உள்ளது. உறுதியான தகவல் இல்லை என்கின்றனர் கதர் கார்கள்..! ஏற்கனவே தலைவர் பொறுப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவேன் என கார்த்தி சிதம்பரமும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சில முக்கிய தலைவர்களும் தலைவர் பதவிக்கு காய்களை நகர்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications