சென்னையில் சாத்தான்குளம் சம்பவம்? காவல்நிலையத்தில் மரணமடைந்த இளைஞர்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
சென்னை : சென்னையில் வாகன சோதனை போது கஞ்சா மற்றும் கத்தி வைத்திருந்ததாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரான விக்னேஷ் மெரினா கடற்கரையில் அங்கு வரும் மக்களை குதிரையில் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் வேலை செய்து வந்தார்.
கடந்த 18ஆம் தேதி விக்னேஷும் அவரது நண்பரான சுரேஷ் என்பவரும் ஒரு ஆட்டோவில் புரசைவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் ஆட்டோவை மடக்கி அதிலிருந்த விக்னேஷிடம் விசாரித்துள்ளனர்.

ஆட்டோவுக்குள் கஞ்சா
இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது மேலும் ஆட்டோவில் நடத்திய சோதனையில் ஆட்டோவிற்கு கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பதாக கூறி இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இரவு முழுவதும் அவர்கள் காவல் நிலையத்தில் இருந்த நிலையில் காலையில் விக்னேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல் நலக்குறைவு வந்ததாக கூறப்படுகிறது.

மர்ம மரணம்
இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். சென்னை முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷின் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகள் காயங்கள் இருந்ததாகவும், போலீசார் விக்னேஷ் அடித்துக் கொன்று இருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர் அதே நேரத்தில் விக்னேஷுக்கு வலிப்பு போன்ற எந்த நோய்களும் இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

கம்யூனிஸ்ட் கோரிக்கை
விக்னேஷ் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விக்னேஷின் உடலை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் அழித்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக காவல் நிலையத்திலேயே இறந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
இந்த நிலையில், இளைஞர் விக்னேஷ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், விக்னேஷின் மரணம் தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications