மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக.. 21 இடங்களில் கடும் போட்டி! தவெகவிற்கு அதிர்ச்சி! அக்னி நியூஸ் சர்வே
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது 'தகிடுதத்தோம்' மோடில் இருக்கிறது. ஒரு பக்கம் 'திராவிட மாடல்' கோட்டையைக் காக்கத் துடிக்கும் தி.மு.க, இன்னொரு பக்கம் 'மீண்டும் எடப்பாடியார்' என முழங்கும் அ.தி.மு.க, இவை எல்லாவற்றிற்கும் நடுவே 'யார் அந்த மூன்றாம் நபர்?' என அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்.
மக்களின் நாடித் துடிப்பு என்ன? 34,220 வாக்காளர்களிடம் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்திய மெகா சர்வே வெளியாகி உள்ளது.

வாக்கு விகிதம்: 'கை' ஓங்குகிறதா 'உதயசூரியன்'?
சர்வே முடிவுகளின்படி, இப்போதைக்கு ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணிதான் 'கிங்'. அதாவது ஆளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்பார். எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமரும். இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடையும். ஆனால், விஜய்யின் வருகை வாக்குகளை எப்படிப் பிரித்திருக்கிறது என்பதுதான் ட்விஸ்ட்.
தி.மு.க கூட்டணி: 45.4% வாக்குகளை வென்று, ஆட்சி அமைக்கும் .
அ.தி.மு.க கூட்டணி: 35.3% வாக்குகளை வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 11.5% வாக்குகளை வெல்லும்.
விஜய்யின் டிவிசி முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை (11.5%) எட்டிப் பிடித்திருப்பது, திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய 'டென்ட்' போட்டிருப்பதை உறுதி செய்கிறது.
சீட் கணக்கு: கோட்டையில் யார்?
வாக்கு சதவீதத்தை விட, அது இடங்களாக மாறும்போதுதான் மேஜிக் நிகழ்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னிலை நிலவரம்:
தி.மு.க கூட்டணி: 178 இடங்கள் வென்று ஆட்சி அமைக்கும். அதோடு தனிப்பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும். இதனால் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. யாரும் ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு இல்லை.
அ.தி.மு.க கூட்டணி: 56 இடங்கள் வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரித்தாலும், அவை தொகுதிகளாக மாறுவதில் இன்னும் சில சவால்கள் இருப்பதை சர்வே காட்டுகிறது.
அந்த 21 தொகுதிகள்... எட்ஜ் ஆஃப் தி சீட்!
இந்த சர்வேயின் மிக முக்கியமான 'அலார்ட்' இதுதான். சுமார் 21 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5% க்கும் குறைவாகவே இருக்கிறது. அதாவது, கடைசி நேர 'திசைமாற்றங்கள்' இந்த தொகுதிகளின் முடிவை மாற்றக்கூடும். இங்கு தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள்தான் அ.தி.மு.க அல்லது தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக (Deciding Factor) இருக்கப்போகிறது.
யார் வாக்களித்தது? (Sample Profile)
தமிழகம் தழுவிய அளவில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் பாலின ரீதியாகவும், வயது ரீதியாகவும் விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டன.
ஆண்கள்: 10,238 பேர்
பெண்கள்: 10,533 பேர்
திருநங்கைகள்: 50 பேர்
வயது வாரியான பங்களிப்பில் இளைய தலைமுறையினரின் ஆர்வம் இந்த முறை மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க கூட்டணி தற்போதைக்கு பலமாகத் தெரிந்தாலும், அ.தி.மு.க தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்கப் போராடுகிறது. விஜய்யின் தவெக 11% வாக்குகளைத் தட்டிச் செல்வது வரும் காலங்களில் தமிழக அரசியலில் ஒரு புதிய 'முக்கோணப் போட்டிக்கு' வித்திட்டுள்ளது. 5 சதவீதத்திற்கும் குறைவான இடைவெளி கொண்ட அந்த 21 தொகுதிகள்தான் 2026-ன் 'கேம் சேஞ்சர்'!














Click it and Unblock the Notifications