"நீங்க கேட்பதை தர முடியாது.." கட் அண்ட் ரைட் திமுக.. 27+1 தானாமே? கையை பிசையும் காங்கிரஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவிடம் அதிக சீட்களை கேட்டுப் பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது திமுக! இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மறுநாள் திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. கனிமொழி தனது இல்லத்தில் காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நேற்று திங்கள்கிழமை நடத்தினார்.

ராஜ்யசபா சீட்
ராஜ்யசபா சீட் ஒன்று வேண்டும் எனக் காங்கிரஸ் கேட்டுள்ளது. அதற்கு திமுக ஓகே சொல்லவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் சட்டசபையில் எத்தனை தொகுதிகள் என்பதில் தான் மிகப் பெரிய கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.
எத்தனை சீட்
கடந்த 2016ல் போட்டியிட்டதை போல 41 இடங்கள் தங்களுக்கு வேண்டும் எனக் காங்கிரஸ் கேட்டுள்ளது. இருப்பினும், 2021ஐ போல அதிகபட்சமே 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என திமுக தரப்பு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ரொம்ப அழுத்தம் வந்தால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வழங்க திமுக ரெடியாக இருக்கிறதாம். ஆனால், அதற்கு மேல் வழங்க வாய்ப்பில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் அதிகபட்சமாக 26 முதல் 28 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும். அதற்கு மேல் தர முடியாது என்பதே திமுக நிலைப்பாடு!
திமுக ரெடியாக இல்லை
சட்டசபைத் தேர்தலில் இறங்கி வேலை செய்ய வலிமையான வேட்பாளர்கள் இல்லை என்று திமுக உறுதியாக நம்புகிறது. இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பலவீனமான நபர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதை திமுக விரும்பவில்லை. 2021 தேர்தலில் கூட திமுக தரப்பே காங்கிரஸ் வெற்றிக்கு இறங்கி வேலை செய்தது. ஆனால், இந்த முறை அந்தளவுக்கு உதவ முடியாது என்பதாலேயே திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் சொல்வது
மறுபுறம், காங்கிரஸ் கடந்த தேர்தலில் சிறந்த வெற்றி விகிதம் பெற்றதைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2026 தேர்தலில் 25 தொகுதிகளில் 18ல் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தது. மறுபுறம் 188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 55ல் தோல்வியைச் சந்தித்தது. இதனால் திமுக வெற்றியை இழந்த தொகுதிகளில் தனக்கு வாய்ப்பு அளிக்கலாம் எனக் காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை திமுக திட்டவட்டமாகவே நிராகரித்துவிட்டது.
கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த முறை கூடுதலாகக் கூட்டணிக் கட்சிகள் வந்துள்ளதால் அதிக இடங்கள் தர முடியாது என்பதை திமுக மிகத் தெளிவாகவே கூறிவிட்டதாம். இதனால் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் ஒதுக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். மறுபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கப் பெரிதும் முயல்கிறது. சுமார் 70 தொகுதிகள் வரை வழங்க தவெக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி அரசு
அதேபோல கூட்டணி அரசு விவகாரத்திலும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தவெக கூட்டாட்சிக்கு ஓகே சொல்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் பங்கு கோரும் காங்கிரஸின் கோரிக்கையைக் கருத்தில் கொள்ளக் கூட மறுக்கிறது. கூட்டணி ஆட்சி என்பது நிலைத்தன்மையற்ற தோற்றத்தை உருவாக்கக்கூடும் என்பதால், தமிழகத்திற்கு இது ஆரோக்கியமானது அல்ல எனக் கூறி திமுக இதை மறுக்கிறது.
இவை அனைத்துமே திமுக- காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்கள் மட்டுமே. இதுவரை அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தை எப்படிச் செல்கிறது என்பது தொடர்பாக திமுகவோ அல்லது காங்கிரஸோ எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. சில சங்கடங்கள் இருந்தாலும் கூட ஓரிரு வாரங்களில் தொகுதிப் பங்கீடு முடியும் என்றே சொல்லப்படுகிறது.
-
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே!












Click it and Unblock the Notifications