தோல்வி பயம்? அனுதாப நாடகத்திற்கு தயாராகும் தமிழக அரசியல் புள்ளி! பின்னணியில் வடமாநில மாஸ்டர் பிளான்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் நான்கு நாட்களில், அதாவது ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், முன்னணி அரசியல் பிரமுகர் ஒருவர் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவும், சிதறிப்போன வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கவும் ஒரு 'அனுதாப நாடகத்தை' அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீர் உடல்நலக்குறைவு? மருத்துவமனையில் அட்மிட்!
உளவுத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, சம்பந்தப்பட்ட அந்த அரசியல் தலைவர் இன்று அல்லது நாளைக்குள் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அல்லது பிரச்சாரத்தின் போது அடிபட்டதாக அறிவிக்க கூடும். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றும், அங்கிருந்து உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுத் தனது ஆதரவாளர்களைக் கண்ணீர் மல்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது தனது தொண்டர்களை எமோஷனலாக வைத்துக்கொள்ள அவர் இப்படி செய்யலாம் என்று கூறப்படுகிறது.
மாற்று மாநில பாணி - அரசியல் ஆலோசகரின் 'ஐடியா'
இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டமே ஒளிந்திருக்கிறது. அண்டை மாநிலம் ஒன்றில் நடந்த தேர்தலில், இதேபோல் ஒரு முக்கியத் தலைவர் காயமடைந்ததாகவோ அல்லது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவோ கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் மூலம் அந்தத் தேர்தலில் அவருக்குக் கிடைத்த பெரும் அனுதாப அலை, வாக்குகளாக மாறி வெற்றியைத் தேடித்தந்தது. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கு காரணம் இல்லை என்பது வேறு விஷயம்.
அதே பாணியைப் பின்பற்றித் தமிழகத்திலும் ஒரு மேஜிக் நிகழ்த்தலாம் என அந்தத் தலைவரின் அரசியல் வியூக வகுப்பாளர் (Political Advisor) ஆலோசனை வழங்கியுள்ளார். "உங்களுக்கு எதிராக இருக்கும் அதிருப்தியைத் தகர்க்கவும், உங்கள் மீது தொண்டர்களுக்கு இருக்கும் பாசத்தை வாக்குகளாக மாற்றவும் இதுவே சரியான தருணம்" என்று அந்த ஆலோசகர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதாலேயே இந்தத் திட்டம் தயாராகி வருகிறதாம்.
வெற்றி வாய்ப்பு மங்கியதால் விபரீத முடிவு?
ஏன் இந்தத் திடீர் முடிவு? கட்சி நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட ரகசியக் கள ஆய்வுகள் மற்றும் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அந்தத் தலைவரின் கட்சிக்குச் சாதகமாக இல்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நழுவுவதை உணர்ந்த அந்தப் பிரமுகர், கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் அரசியலில் தடம் தெரியாமல் போய்விடுவோம் என்ற பயத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவார்களா?
இந்த நாடகத்தின் முக்கிய நோக்கமே, கட்சியின் விசுவாசமான தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைத்து, அவர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வருவதுதான். மருத்துவமனைப் படுக்கையில் இருந்து அவர் பேசும் ஒரு உருக்கமான வீடியோ, பொதுமக்களிடையே ஒரு அனுதாப அலையை உருவாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் வேளையில், இதுபோன்ற 'திடீர்' உடல்நலக்குறைவுகள் தமிழக அரசியலில் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தத் திட்டத்தை அவர் செயல்படுத்தினால், மக்கள் இதனை உண்மையாக நம்புவார்களா அல்லது தேர்தல் நேரத்து நாடகமாகப் பார்ப்பார்களா என்பது மே 4 அன்று ரிசல்ட்டின் போது தெரிந்துவிடும்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications