Just In
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சேவைகள் தொடங்கி உள்ளது.
மின்சாரம் கட்டணம் செலுத்ததமிழ்நாடு மின்சார வாரியம் தனது மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக www.tangedco.gov.in , www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in என்ற வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய | புதிய |
www.tangedco.gov.in | www.tangedco.org |
www.tantransco.gov.in | www.tantransco.org |
www.tnebltd.gov.in | www.tnebltd.org |