TN Exit poll: திமுக கூட்டணி 169 சீட்.. தவெக 1 சீட் மட்டுமே.. அக்னி நியூஸ் வெளியிட்ட சர்வே ரிசல்ட்!
சென்னை: திமுக கூட்டணி 169 இடங்களில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் நடத்திய எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என எக்ஸிட் போல் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் எக்சிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தது. மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இத்துடன் இன்று மாலை 6 மணியுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்தது.

இதனால், அனைவரின் பார்வையும் இப்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் மீது திரும்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும். அதன்படி தற்போது, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவை வெளியிட்டுள்ளது. இதில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும், எந்தக் கட்சிக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும், எந்த மண்டலத்தில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்லக்கூடும் என பல கோணங்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2026 சட்டசபை தேர்தலில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 64 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தவெக 1 சீட் வெல்ல வாய்ப்புள்ளது என இந்த எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில், திமுக, 43.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 34.8% வாக்குகளைப் பெறும் என்றும், தவெக 15.1% வாக்குகளைப் பெறும் என்றும், நாம் தமிழர் கட்சி 4.1% வாக்குகளைப் பெறும் எனவும் அக்னி நியூஸ் சர்வீசஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications