சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்? ஆதாரங்களுடன் தமிழக அரசு அறிக்கை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசமில்லை. நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத் துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது என வாதம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985, 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என கூறி அந்த ஆதாரங்களை தாக்கல் செய்தார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன. கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு இருக்கிறது உள்ளிட்ட விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அறநிலையத் துறை அறிக்கையில் பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications