அரசு ஊழியர்களுக்கு தான் தீபாவளியே.. தமிழக அரசின் சர்ப்ரைஸ்! அக்கவுண்டுக்கு வரப் போகுது 45 ஆயிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் பணி ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு 198 கோடியே 84 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அதிகபட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபேஎற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு பணிகளில் அரசு ஊழியர்கள் தான் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

TN Govt Government Employees Election

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவில் பணியாற்றியவர்களுக்கும் அவர்களின் பொறுப்பு மற்றும் பணியின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள்

மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்), மாவட்ட ஆட்சியர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் (தேர்தல்), சிறப்பு வட்டாட்சியர்கள் (தேர்தல்) ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இவர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது ரூ.45 ஆயிரம் என இரண்டில் எது குறைவான தொகையோ அது வழங்கப்படும்.

தேர்தல் பணி மதிப்பூதியம்

மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் பணிக்கான துணை வட்டாட்சியர்கள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்களுக்கான தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கும் இதே முறையில் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.

ரூ.30 ஆயிரம்

மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவுகளில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

பறக்கும் படையினர்

அதேபோல் தேர்தல் நேரத்தில் முக்கியப் பணிகளை மேற்கொண்ட பறக்கும் படையினர், காணொளிக் கண்காணிப்புக் குழுவினர், காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்யும் குழுவினர், கணக்குப் பதிவுக் குழுவினர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் குழுவினர் ஆகியோருக்கும் இந்தத் தொகை வழங்கப்படும்.

ரூ.20 ஆயிரம்

மேலும் உதவிச் செலவினக் கண்காணிப்பாளர்கள், நிலையான கண்காணிப்புக் குழுவினர், மண்டல உதவியாளர்கள் ஆகியோரும் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் மதிப்பூதியம் பெறுவார்கள். இவர்களுக்கும் ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது ரூ.30 ஆயிரம் என இரண்டில் குறைவான தொகையே கணக்கிடப்படும். மாவட்ட ஆட்சியர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் (பொது), ஒருங்கிணைப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

அடிப்படை ஊதியம்

இவர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.20 ஆயிரம் என இரண்டில் குறைவான தொகை மதிப்பூதியமாக வழங்கப்படும். தேர்தல் பணிகளுக்காக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கும் தனியாக மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பணியாற்றிய மூத்த நிரலாளர்கள், நிரலாளர்கள், உதவி நிரலாளர்கள் மற்றும் மாநில அளவிலான தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரம், தேர்தல் தரவு இயக்குநர்களுக்கு ரூ.10 ஆயிரம், பிரிவு எழுத்தாளர்களுக்கு ரூ.7,500 வழங்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+