தமிழ்நாடு லாக்டவுன்.. தளர்வுகளோடு சில விஷயங்களுக்கு தடை தொடரும்.. அரசு அறிவிப்பு.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 12-ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி காலை 6 மணி வரை சில விஷயங்களுக்கு தற்போது உள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்னென்ன சேவைகளுக்கு இந்த ஊரடங்கு நீட்டிப்பு காலகட்டத்திலும் தடைகள் தொடரும் தெரியுமா? இதோ பாருங்கள் முழு விபரம்:
சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர்

பஸ் சேவைக்கு தடை தொடரும்
புதுச்சேரி நீங்கலாக பிற மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து நடைபெறாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது புதுச்சேரிக்கும் அந்த தடை இருந்த நிலையில் அது மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. இதேபோல நோய் பரவல் குறைந்தால் 19ம் தேதிக்கு பிறகு, ஊரடங்கு தளர்வின் போது பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான போக்குவரத்து
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தடை அமலில் இருக்கிறது. அது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தியேட்டர்கள் திறப்பு இல்லை
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. எனவே தியேட்டர்களில் படம் பார்க்க முடியாது. அதேபோன்று மதுக்கூடங்கள் என்று அழைக்கப்படக்கூடிய... உள்ளே அமர்ந்து மது அருந்தும் வசதிக்கான தடை நீடிக்கிறது.

பொதுக் கூட்டம் கூடாது
நீச்சல் குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட கூடாது என்ற தடை தொடர்கிறது. பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த பொதுக் கூட்டங்களுக்கு தடை தொடர்கிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அந்த தடையும் தற்போது தொடர்கிறது.

பள்ளிகள், கல்லூரி
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது அல்லவா. அந்த தடையை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எனவே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் கல்வி கற்க வேண்டி இருக்கும். இதே போல உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

திருமணத்திற்கு கட்டுப்பாடு
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

கடைகள் திறப்பு
மேலும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.












Click it and Unblock the Notifications