சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர்
மாஸ்கோ: சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்ய கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

மாஸ்கோவில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் போது கொரோனா பரிசோதனைகள் நடத்தி அதனடிப்படையில் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது சில நாடுகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறது.
இது குறித்து சில புரிதல்கள் ஏற்பட வேண்டியது உள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சருடன் ஆலோசித்தேன். சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசி அடிப்படையில் முடிவெடுக்க கூடாது.
கொரோனா பாதிப்பில் இருந்து ரஷ்யாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாத்து உலக நாடுகளுக்கும் உதவுகின்றன. சர்வதேச பயண அனுமதி தொடர்பாக உலக நாடுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications