தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு எம்பிபிஎஸ் படிக்க எவ்வளவு கட்டணம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்பிற்கான கட்டணம் எவ்வளவு என்பதை பார்க்கலாம். தற்போது தமிழகத்தில் மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கான கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் அரசு கல்லூரி கட்டணத்தை பார்க்கலாம்.
மருத்துவம், பொறியியல், சட்டம், பேஷன் டிசைன் உள்ளிட்ட படிப்புகளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் சேருகிறார்கள். அந்த வகையில் மருத்துவ படிப்பில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் நிறைய மாணவர்கள் பயில்கிறார்கள்.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் (பல் மருத்துவம்) உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு அவசியமானது. இந்த நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவ படிப்பு என்பது கைகூடுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது
இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. இதன் முடிவுகளும் கடந்த மாதம் வெளியானது. இதனிடையே தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கிவிட்டது. அரசு, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும்.
எத்தனை சீட்
அந்த வகையில் மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள இடங்களில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழக அரசின் ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகிறது.
இவையல்லாமல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3,450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களளும் உள்ளன. இதிலும் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகிறது. எனவே அரசு, தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 496 இடங்கள் வழங்கப்படுகின்றன.
எம்பிபிஎஸ் கட்டணம்
இந்த 36 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கல்வி கட்டணம் ரூ.6,000, சிறப்பு கட்டணம் ரூ.2,000, வைப்பு தொகை ரூ.1,000, நூலக கட்டணம் ரூ.1,000, பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.7,473, எல்.ஐ.சி கட்டணம் ரூ.300, ரெட் கிராஸ் கட்டணம் ரூ.100, இதர கட்டணம் ரூ.100, தேசிய கொடி கட்டணம் ரூ.100 என்ற விதம் மொத்தம் ரூ.18,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவ கல்லூரிகள்
அது போல் சென்னை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 250 இடங்கள் உள்ளன. அதன்படி 37 இடங்கள் இந்திய ஒதுக்கீட்டிலும் 213 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1900 இடங்கள் உள்ளன. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 126 இடங்கள் உள்ளன.
பிடிஎஸ் கல்விக் கட்டணம்
தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு பல் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு கல்வி கட்டணம் ரூ.4,000, சிறப்பு கட்டணம் ரூ.2,000, வைப்பு தொகை ரூ.1,000, நூலக கட்டணம் ரூ.1,000, பல்கலைக்கழக கட்டணம் ரூ.7,473, எல்ஐசி கட்டணம் ரூ.300, ரெட் கிராஸ் கட்டணம் ரூ.100, இதர கட்டணம் ரூ.100 மற்றும் கொடி தினத்திற்கு ரூ.100 என மொத்தம் ரூ.16,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு சலுகை
எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவு மாணவர்களுக்கு 12,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.10,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications