கிண்டி லோக் பவனுக்கு செல்லும் முதல்வர் விஜய்.. இன்று ஆளுநர் அர்லேகர் உடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஆளுநரை நேரில் சந்திக்க உள்ளார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்.

கேரளத்தின் முழு நேர ஆளுநராகவும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்து வந்தார் ஆர்.வி. அர்லேகர். முன்னதாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 5 ஆம் தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதால் கேரள ஆளுநரான அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Arlekar governor vijay

இவர்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் மாளிகையில் முதலமைச்சர் விஜய் இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

முன்னதாக முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அர்லேகர், கோவாவில் பாஜக எம்.எல்.ஏ ஆகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். கோவா சட்டமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச ஆளுநராகவும் அதன்பிறகு, பீகார், கேரளா மாநிலங்களுக்கு ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றபோதிலும் பெரும்பான்மை கிடைக்காததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடித்தார் அர்லேகர். அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரிய போதிலும், பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மெஜாரிட்டி நம்பருடன் வந்தால் தான் ஆதரவு என்று ஆளுநர் உறுதியாகக் கூறினார்.

அப்போது ஆளுநர் அர்லேகரின் செயல்பாட்டுக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும், அதிமுக, திமுக இணைந்து ஆட்சியமைக்க ஆளுநர் மறைமுகமாக காலந்தாழ்த்துவதாகவும் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+