2027 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்கள் மொத்தம் எத்தனை? 8 நாள் சனி, ஞாயிறுகளிலேயே போச்சு!
சென்னை: 2027ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு 2027 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு விடுமுறை நாட்களில் 8 நாட்கள், சனி, ஞாயிறுகளில் வருகின்றன.
2027 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில், தலைமைச் செயலர் சாய்குமார் கையெழுத்திட்ட உத்தரவில் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ளதன்படி, ஞாயிற்றுக் கிழமைகள் அல்லாமல் கீழ்காணும் தினங்களும் அரசு விடுமுறையாக கருதப்படும். இந்த நாட்களில் அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது. இதுதவிர வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு துறைரீதியான விடுமுறைகள் தனிப்பட்ட முறையில் அளிக்கப்படலாம்.
2027 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்
ஆங்கிலப் புத்தாண்டு தினம் - ஜனவரி 1 (வெள்ளிக்கிழமை)
பொங்கல் - ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை)
திருவள்ளுவர் தினம் - ஜனவரி 16 (சனிக்கிழமை)
உழவர் திருநாள் - ஜனவரி 17 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பூசம் - ஜனவரி 22 (வெள்ளிக்கிழமை)
குடியரசு தினம் - ஜனவரி 26 (செவ்வாய்க்கிழமை)
ரம்ஜான் (ஈதுல் பித்ர்) - மார்ச் 10 (புதன்கிழமை)
புனித வெள்ளி - மார்ச் 26 (வெள்ளிக்கிழமை)
வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் - ஏப்ரல் 1 (வியாழக்கிழமை) (தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்)

தெலுங்கு புத்தாண்டு தினம் - ஏப்ரல் 7 (புதன்கிழமை)
தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14 (புதன்கிழமை)
மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 19 (திங்கட்கிழமை)
மே தினம் - மே 1 (சனிக்கிழமை)
பக்ரீத்- மே 17 (திங்கட்கிழமை)
மொகரம் (யோம்-இ-ஷஹாதத்) - ஜூன் 15 (செவ்வாய்க்கிழமை)
சுதந்திர தினம், மிலாதுன் நபி - ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை)
கிருஷ்ண ஜெயந்தி - ஆகஸ்ட் 25 (புதன்கிழமை)
விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 4 (சனிக்கிழமை)
காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (சனிக்கிழமை)
ஆயுத பூஜை - அக்டோபர் 8 (வெள்ளிக்கிழமை)
விஜயதசமி - அக்டோபர் 9 (சனிக்கிழமை)
தீபாவளி - அக்டோபர் 28 (வியாழக்கிழமை)
கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (சனிக்கிழமை)


Click it and Unblock the Notifications
