6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக பொதுவாக ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.. அதுபோல இப்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாகத் திருப்பத்தூர் திருவண்ணாமலை சேலம், தென்காசி செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அது தவிரத் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர லட்சுமி ஐஏஎஸ், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் உள்ளவர்களை பணியிடமாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படியே இந்த உத்தரவு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை












Click it and Unblock the Notifications