தமிழகம்: 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு.. தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதற்காக அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை தவிர்த்து 16 ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tamil nadu Independent examiners apply from tomorrow for public exams

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம், விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என கூறியுள்ளது.

தட்கல் முறையில் விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புக்கு ரூ.500, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ.1,000 தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+