இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடம்! உபிக்கு எந்த இடம்? பரபர தகவல்
சென்னை: இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தில் உத்தர பிரதேசம் இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் நலத்திட்டஙகளை செயல்படுத்த கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதன்படி ரிசர்வ் வங்கி மூலம் சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்கள் வாயிலாக மாநிலங்கள் நிதி திரட்டுகின்றன. அதற்கான வட்டி சந்தை நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த வகையில் நிதி நிலைமை வலுவாக இருக்கும் மாநிலங்கள் குறைந்த வட்டியிலும், நிதி நிலை பலவீனமாக உள்ள மாநிலங்கள் அதிக வட்டியிலும் கடன் பெறுகின்றன. இந்நிலையில் தான் 2022-23ம் நிதியாண்டின் முடிவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவில் உள்ளது.

அதன்படி பார்த்தால் 2022-23 நிதியாண்டின் முடிவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் ரூ.87,000 கோடியாக உள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டில் இருந்து அப்படியே தொடர்ந்து வருகிறது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் சிவசேனா-பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தின் கடன் ரூ.72,000 கோடியாக உள்ளது.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் ரூ.63 ஆயிரம் கோடி கடனுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 4வது இடத்தில் நமது அண்டை மாநிலமான முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியன் ஆந்திரா உள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்திர பிரதேசம் மாநிலம் உள்ளது. உத்தர பிரதேசத்தின் கடன் மதிப்பு ரூ.55,612 கோடியாக இருக்கிறது.
இதில் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மாநில வளர்ச்சிக் கடன் எனப்படும் ஏல பத்திரங்கள் மூலம் கடன் வாங்குகின்றன. தணிக்கை செய்யப்படாத சிஏஜி புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டின் வரி வருவாய் 2021-22ல் ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23ல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கான வரி வருவாய் ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் வருவாய்க்கான செலவு என்பது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அதன்படி 2021-22ல் ரூ.2,47,5,79.99 கோடியாக இருந்த வருவாய் செலவீனம், 2022-23ல் ரூ.2,69,562.94 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் செலவினங்களில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், பிற ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications