திடீரென இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய கட்டிடம்.. 24 வீடுகள் தரைமட்டம்.. பதற்றம்
சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புக் கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்திற்குள் மக்கள் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
Recommended Video
திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைமாற்றுவாரியக் குடியிருப்பில் டி பிளாக்கில் நேற்றிரவு முதலே விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை விரிசல் அதிகரிக்கவே அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
குடியிருப்பில் இருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் காலையில் மொத்த கட்டிடமும் சடசடவென இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகள் அனைத்தும் இடிந்து மண்மேடாக காட்சியளிக்கிறது.

5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தீயணைப்புப்படை வீரர்கள் தேடி வருகின்றனர்.
கட்டிடத்தில் இருந்த குடும்பத்தினர் முன்கூடியே வெளியேறியதால் அனைவரும் உயிரோடு தப்பியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நீர் நிலைகளில் கட்டிடம் கட்டியதால் மட்டுமே விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

23ஆண்டுகளுக்குள் கட்டிடம் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் தொட்டாலே உதிரும் சிமெண்ட் பூச்சுடன் கட்டிடம் கட்டப்பட்டிருந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
டி பிளாக் மட்டுமே இப்போது இடிந்து விழுந்தாலும் சி பிளாக்கில் வசிப்பவர்களும் மற்ற குடியிருப்புகளும் உடைந்து வழும் வகையில்தான் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications