மீண்டும் உயர்ந்த ஓட்டு சதவீதம்.. தமிழகத்தில் 3வது முறையாக தேர்தல் ஆணையம் திருத்தம்! இப்போ எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என 40 இடங்களுக்கும் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம் குறித்து இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்றைய தினம் ஓட்டு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அன்று நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதியாக வெளியிடப்படும் வாக்கு சதவீதம் என்பது ஒன்று முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது. இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் நேற்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகள் மற்றும் மொத்த வாக்கு சதவீதத்தை அறிவிப்பதாக இருந்தது. ஆனால் 3க்கும் மேற்பட்ட நேரங்கள் கூறியும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது நடக்கவில்லை.
இதையடுத்து நேற்று மாலையில் தேர்தல் ஆணையம் தமிழக ஓட்டு சதவீதம் தொடர்பான விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது ஓட்டு சதவீத அளவை இந்திய தேர்தல் ஆணையம் 3வது முறையாக மாற்றி அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் பதிவாகி உள்ள ஓட்டு சதவீதம் 0.15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பதிவான மொத்த ஓட்டு சதவீதம் என்பது 69.71 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதி வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. மேலும் திருவள்ளூர் தொகுதியில் 68.59 சதவீதம், வடசென்னையில் 60.11 சதவீதம், தென்சென்னையில் 54.17 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.25 சதவீதம், காஞ்சிபுரத்தில் 71.68 சதவீதம், அரக்கோணத்தில் 74.19 சதவீதம், வேலூரில் 73.53 சதவீதம், கிருஷ்ணகிரியில் 71.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
மேலும் திருவண்ணாமலையில் 74.24 சதவீதம் ஆரணியில் 75.76 சதவீதம், விழுப்புரத்தில் 76.52 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.21 சதவீதம், சேலத்தில் 78.16 சதவீதம், நாமக்கல்லில் 78.21 சதவீதம், ஈரோட்டில் 70.59 சதவீதம், திருப்பூரில் 70.62 சதவீதம், நீலகிரியில் 70.95 சதவீதம், கோவையில் 64.89 சதவீதம், பொள்ளாச்சியி்ல 70.41 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
அதோடு திண்டுக்கல்லில் 71.41 சதவீதம், கரூரில் 78.70 சதவீதம், திருச்சியில் 67.51 சதவீதம், பெரம்பலூரில் 77.43 சதவீதம், கடலூரில் 72.57 சதவீதம், சிதம்பரத்தில் 76.37 சதவீதம், மயிலாடுதுறையில் 70.09 சதவீதம், நாகப்பட்டினத்தில் 71.94 சதவீதம், தஞ்சாவூரில் 68.27 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
இதுதவிர சிவகங்கையில் 64.26 சதவீதம், மதுரையில் 62.04 சதவீதம், தேனியில் 69.84 சதவீதம், விருதுநகரில் 70.22 சதவீதம், ராமநாதபுரத்தில் 68.19 சதவீதம், தூத்துக்குடியில் 66.88 சதவீதம், தென்காசியில் 67.65 சதவீதம், திருநெல்வேலியில் 64.10 சதவீதம், கன்னியாகுமரியில் 65.44 சதவீதம் என மொத்தம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 69.72 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications