உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை! முன்மாதிரி எம்.எல்.ஏ.! அமைச்சர்களின் அதீத பாசம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை எனக் கூறியிருக்கிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
மேலும், 234 தொகுதிகளுக்கும் முன்மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திகழ்வதாகவும் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை காட்டிலும் முன் மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திகழ்வதாக அமைச்சர் கூறியிருப்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை இம்மாத இறுதிக்குள் மாற்றியமைக்கப்படும் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் அவரது 45வது பிறந்தநாள் விழா நடைபெற்ற நிலையில் தொடர்ச்சியாக பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கலந்துகொண்டு பேசும் அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் எனப் பேசி தங்கள் அன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் குரல்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால் அவரிடம் உள்ள திறமை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.இதேபோல் உதயநிதிக்கு கட்சிக்காரர்கள் ஆதரவு மட்டுமின்றி மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தார். அமைச்சர் சிவசங்கரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார்.

அமைச்சர் மூர்த்தி
அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள அமைச்சர் மூர்த்தி எல்லாவற்றுக்கும் மேலாக, உதயநிதி ஸ்டாலினின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை எனப் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார். இதுமட்டுமல்ல 234 தொகுதிகளுக்கும் முன்மாதிரி தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திகழ்வதாகவும் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கூறியுள்ளார். இவர் சொல்வதை பார்த்தால் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரை காட்டிலும் சேப்பாக்கம் சிறந்து விளங்குவதாக பொருள்படுகிறது.

என்ன துறை?
அமைச்சர்கள் வரிசையாக உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதை வைத்து பார்த்தால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் கட்டாயம் இடம் பிடித்துவிடுவார் போல் தெரிகிறது.இதனிடையே உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை தான் என ஆருடங்கள் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications