தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
சென்னை: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு ஊதியம் இப்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 2000மாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல்கள்
தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது.

விரைவில் தேர்தல்
இந்த கொள்கை விளக்க குறிப்பில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றும், தற்போது இவற்றிற்கு தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல்
மாவட்ட பிரிப்புகளுக்கு உள்ளான மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொள்கை விளக்க குறிப்பில் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் 27 மாவட்டங்களில் 2019-20ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடந்தது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications