தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 லட்சம் கோடியாக உயர்வு - வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாக வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாக வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், கடந்த 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளை அறிக்கை வெளியிட பலர் உதவி செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றார்.
தமிழகத்தில் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ2,63,976 பொது சந்தா கடன் உள்ளது.
தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டதாக குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வருமானம் அதிக அளவில் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழகத்தின் வருமானம் குறைந்து செலவு அதிகரித்துள்ளதை தற்போது குறிப்பிட்டு ஆக வேண்டும். மேலும் 2020-21ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பது முக்கிய பிரச்சனை. 2006 - 2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது. கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது.
வருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 2020 - 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும். ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது.
கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications