குடியரசுத் தலைவர் தேர்தல் : பாஜகவிற்கு தேவைப்படும் வாக்குகள்.. திமுக ஓட்டு மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378 ஆகும். இதில் ஒவ்வொரு கட்சிகளின் பங்கு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

குடியரசு தலைவர் தேர்தல்
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தேதியை கடந்த வியாழன் அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஜூலை 18ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

4,809 உறுப்பினர்கள்
இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியாக 4,809 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் 233 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்கள், 543 பேர் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 4,033 அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

வாக்கு மதிப்பு
குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. சிக்கிம் மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு 7 ஆகும்.

பாஜக
அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. அதாவது மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 5,25,706 ஆகும்.

பாஜக வெற்றி பெற
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற 50க்கும் அதிகமான சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுவதற்கு 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு மற்ற கட்சிகள் சிலவற்றின் ஆதரவு தேவைப்படும்.

தமிழக எம்.பி.க்கள்
குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 176. நாடு முழுவதும் ஒரு எம்.பிக்கு ஒட்டு மதிப்பு 700 ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆகும். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378.

திமுக
மொத்த வாக்கு மதிப்பான 76,378-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 எம்.பிகளை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக முக்கியப் பங்கு வகிக்கும்.

திமுக கூட்டணி
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் இருப்பதால் அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 3,504 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும் உள்ளன. ம.தி.மு.க 700 வாக்குகளைக் கொண்டுள்ளது.

அதிமுக
அதிமுகவிற்கு 66 எம்.எல்.ஏக்களும், 6 எம்.பிக்களும் உள்ளனர். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு 15,116 ஆக உள்ளது. பா.ம.கவுக்கு 1,508 வாக்குகள் உள்ளன. ஒரு எம்.பி பதவியை கொண்டுள்ள த.மா.காவுக்கு 700 வாக்குகள் உள்ளன.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications