முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை! மதத்தின் பெயரால் பாரபட்சமா? பனீந்திர ரெட்டிக்கு தவ்ஹீத் ஜமாத் கடிதம்!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என சந்தேகம் எழுவதாக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் எழுதிய கடிதம் வருமாறு;

ஆயுள் சிறைவாசிகள்
''இந்தியாவின் தண்டனை சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறாகள். தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாரும் மாற்று கருத்து கொள்ள மாட்டார்கள். அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசானையை தமிழக அரசு வெயியிட்டு இருந்தது. சிலர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளார்கள்.''

முஸ்லிம் சிறைவாசிகள்
''அதில் கோவை முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ராஜிவ் காந்தி அவர்களை கொலை செய்ய நடந்த குண்டுவெடிப்பில் குற்றவாளிகள் என்று கைது செய்யபட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட தற்போது விடுதலை ஆகி இருக்கிறார்கள். நீதி செலுத்துவதில் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டபடுகிறதோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உள்ளது. ''

நீதிபதி ஆதிநாதன்
''கோவை முஸ்லீம் சிறைவாசிகள் குறித்து நீதிபதி ஆதிநாதன் அவர்கள் தலைமையில் அமைக்கபட்ட கமிஷன் இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. தமிழக முதல்யர் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று வாக்குறுதி தந்தார், அதுவும் கிடப்பில் உள்ளது. ''

மதத்தின் பெயரால்
''குற்றவாளிகள் விடுதலையில் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும், முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.'' இவ்வாறு உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications