அரசு பஸ் டிஜிட்டல் போர்டில் திமுக ஒரு தீயசக்தி! கொளத்தூர் கொத்து பரோட்டா! வாசகம்! 5 பேர் சஸ்பென்ட்
திருச்சி: திருச்சியில் இருந்து புதுவைக்கு கடந்த 13 ஆம் தேதி சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்ட்டில் திமுகவை விமர்சித்து வாசகங்கள் இருந்ததால் பேருந்து ஓட்டுநர், டிரைவர் உள்பட 5 ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் இருந்து புதுவைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பின்புறத்தில் இருந்த ஊர் பெயர்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் போர்டில் "ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி, கொளத்தூர் கொத்து பரோட்டா, உங்க அப்பாவை காணோம், கக்கூஸ் லீடர் உதயநிதி" என திமுகவை விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதை யாரோ வாகன ஓட்டி வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அரசு போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கும் சென்றது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் ரூட் போர்டில் சாப்ட்வேர் அல்லது யூஎஸ்பி பென் டிரைவ் மூலம் மட்டுமே வாசகங்களை பதிவு செய்ய இயலும்.
மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவேற்றம் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கும் என்பதால் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஓட்டுநர்கள் சித்திரை செல்வன், பரந்தாமன், நடத்துநர்கள் செந்தாமரை கண்ணன், வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோர் குறிப்பிட்ட நாளில் அந்த பேருந்தை இயக்கியவர்கள் என்பதால் அவர்கள் 5 பேரையும் ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன்.
தவெக கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதிலிருந்தே விஜய், திமுகவை தூயசக்தி என விமர்சித்து வருகிறார். தனது தேர்தல் பிரச்சாரங்களில் ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சொல்லத் தொடங்கினார். அது போல் அதிமுகவை தூர்ந்த சக்தி என விமர்சித்தார். தவெகவை தூயசக்தி என கூறிக் கொண்டார்.
அது முதல் திமுகவை தவெகவினர் தீய சக்தி என்றே அழைத்து வருகிறார்கள். குழந்தைகள் கூட இதை ஒரு ரைம்ஸ் போல சொல்லி வருகிறார்கள். அது போல் திமுகவோ கடந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஒருத்தரின் பொருளை வைத்தே அவரை அடிப்பதை போல் ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.



Click it and Unblock the Notifications
