குடியிருப்புகள், கட்டுமானங்கள் ஆய்வு.. அண்ணா பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியகுடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வாரியத்தின் பழைய குடியிருப்புகள், புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவு செய்து தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

மதராஸ் நகரத்தில் வீட்டு வசதியை மேம்படுத்த 1947ஆம் ஆண்டு, 'நகர முன்னேற்ற அறக்கட்டளை' ஆரம்பிக்கப்பட்டது. பிறகு மாநிலம் முழுவதும் வீட்டு வசதியை மேம்படுத்த 1961ஆம் ஆண்டில் அது 'தமிழக வீட்டு வசதி வாரியம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. சென்னையில் தொடங்கிய வாரியத்தின் பணிகள், 1984-லிருந்து மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் என நீட்டிக்கப்பட்டன.

Tamil Nadu Urban Habitat Development Board agreement MoU with Anna University

குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்தார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியகுடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வாரியத்தின் பழைய குடியிருப்புகள், புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவு செய்து தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி, கட்டுமானம் உள்ளிட்டவற்றை தொடக்கத்தில் இருந்தே ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஐடி-மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (கியூப்) ஆகியவற்றுடன் வாரியம் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால், 112 கோடி மதிப்பில் 864 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால் அந்த குடியிருப்பு கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு தொட்டாலே உதிரும் நிலையில் இருந்ததால், அந்தக் கட்டிடத்தில் குடியேறிய மக்கள் அது குறித்து புகார் எழுப்பியதுடன், கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இந்த விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்தது, இதன்காரணமாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது, கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு குறித்த முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்த நிலையில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் இடம் கே.பி பார்க் குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி அறிக்கையை ஐஐடி வல்லுநர் குழு இன்று தாக்கல் செய்தது. அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு சுமார் 441 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கே.பி.பார்க் கட்டுமானத்தை ஆய்வு செய்த ஐஐடி குழு தன் அறிக்கையில், 'தரமற்ற வகையில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புளியந்தோப்பில் பூங்கா. திருவொற்றியூரில் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததால், வாரியத்தின் தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள் தரக் கண்காணிப்பைத் தவிர, இந்த நிறுவனங்கள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினராகச் செயல்படும் மற்றும் நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் கட்டுமானத் திட்டங்களை அவ்வப்போது ஆய்வு செய்யும்.

இந்த ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய TNUHDB நிர்வாக இயக்குனர், கோவிந்த ராவ், கட்டுமான கட்டத்திலேயே தரத்தை உறுதி செய்து, தேவைப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாரியம் மாநிலம் முழுவதும் பல கட்டுமானத் திட்டங்களைச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களாகக் கண்காணிக்க குறிப்பிட்ட திட்டங்கள் ஒதுக்கப்படும் என்றார்.அவர்களுக்கு தெளிவான விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வாரியத்திடம் சமர்ப்பிப்பார்கள் என்று நிர்வாக இயக்குநர் ராவ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+