'சென்னைவாசிகளே.. அடுத்த 4 நாள் உங்களுக்கு ஒரே ஜாலிதான் போங்க'.. 'ஜில்ஜில்' செய்தி சொன்ன வெதர்மேன்!
சென்னை: சென்னையில் அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் திடீர் மழை
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று சூறைக்காற்றுடன் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், புரசைவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு. மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

குளம்போல் தேங்கிய தண்ணீர்
கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திடீர் மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

நான்கு நாட்களுக்கு மழை இருக்கு
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார். இன்று மதிய வேளையில் டெல்டாவின் திருவாரூர்-நாகை பெல்ட் பகுதிகளில் மழை பெய்தது.

வெதர்மென் கணிப்பு
மாலை வேளையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் அனைத்தும் இடி மின்னலுடன் மழை கொட்டியுள்ளது. இன்று மட்டுமல்ல அடுத்த 3-4 நாட்களுக்கு மேற்கண்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்க்க போகுது என்று தமிழ்நாடு வெதர்மென் கூறியுள்ளார்.

அதிகபட்ச மழை எங்கே?
சென்னை வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ மழையும் கொட்டியுள்ளது. சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டக்களிலும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications