சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய மாநிலங்களைவிட.. தமிழகம், கேரளாவுக்குதான் அதிக டோஸ் கொரோனா வேக்சின் கிடைக்கும்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி அமலுக்கு வரும்போது, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைவிட, அதிக அளவுக்கான டோஸ் தமிழகத்திற்குத்தான் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் உள்ளது. அது என்ன? ஏன் தமிழ்நாடு ஸ்பெஷல்? இதோ பாருங்கள்.

கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்த திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதன்படி,
50க்கும் மேற்பட்ட வயதுடைய மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக மருந்து ஒதுக்கீடுகள் கிடைக்கும்.

பீகாரை விட அதிகம்

பீகாரை விட அதிகம்

இதன் பொருள் என்ன தெரியுமா? பீகார், மத்தியப் பிரதேசம் அல்லது ராஜஸ்தானை விட தமிழகம் அதிக தடுப்பூசிகளைப் பெற முடியும். பீகாரின் மக்கள் தொகை 12.3 கோடி. இது தமிழ்நாட்டை விட (7.6 கோடி) 60 சதவீதம் பெரியது, ஆனால் 1.8 கோடி மக்கள் மட்டுமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆனால் தமிழகத்தில், கிட்டத்தட்ட 2 கோடி அளவுக்கான மக்கள் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

அதிக வயதுள்ளோர் மட்டும் கிடையாது. இணை நோய்கள் என்று கூறப்படும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெறும்.

கேரளாவில் இணை நோயாளிகள்

கேரளாவில் இணை நோயாளிகள்

பீகார் போன்ற இளைஞர்கள் அதிகமுள்ள மாநிலங்களில், இணை நோய் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர். கேரளாவில், சுமார் 1 கோடி மக்கள் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முன்னுரிமை பிரிவில் அதிக சதவீத மக்களைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. எனவே முதியோர் எண்ணிக்கையில், தமிழகமும், நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளமும் அதிக தடுப்பூசிகளை பெறும் வாய்ப்பு உள்ளது.

எத்தனை பேருக்கு முன்னுரிமை

எத்தனை பேருக்கு முன்னுரிமை

மக்கள்தொகையில் சுமார் 19.5% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4 கோடி பேர் முன்கள பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும், காவல்துறையினர், இணை நோயாளிகள் என்ற பிரிவின்கீழ் வருகிறார்கள்.

தமிழகம் டேட்டா

தமிழகம் டேட்டா

இதற்கிடையில், NFHSன், 2015-16ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கைப்படி, 50 வயதுக்குக் குறைவான மக்கள் தொகையில் சுமார் 6.5% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. மேலும் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஜார்கண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லைய. எனவே, இந்த மாநிலங்களில் உள்ள, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயர் இரத்த அழுத்தம் இன்னும் தெரியவில்லை.

English summary
When the corona vaccine comes into effect, it has been reported that Tamil Nadu will get higher doses than states like Bihar, Madhya Pradesh and Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X