எப்படி இருக்கீங்க.. நடிகர் அஜித்குமாருக்கு போன் செய்த தவெக தலைவர் விஜய்.. உடல் நலம் பற்றி விசாரிப்பு
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித், சிறிய அறுவை சிகிச்சைக்கு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். வீடு திரும்பிய அஜித்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் விஜய் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்று நடித்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை வந்திருந்த நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. முதலில் வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அதற்கடுத்து தகவல்கள் வெளிவந்தது.
அதாவது, நடிகர் அஜித்குமாருக்கு காது - மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும் அஜித்குமார் உடல்நலம் சீராக உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் இன்று காலை நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் இன்று அஜித்குமார் வீடு திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்குமாருக்கு தளபதி விஜய் செல்போன் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நலன் குறித்து விஜய் தொடர்ந்து கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினரிடமும் நடிகர் அஜித்குமாரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் டாக்டர் என்ன கூறினர் என்றும், எந்த மாதிரியான அறிவுரகளை வழங்கினர் என்பது குறித்தும் நடிகர் விஜய் குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செல்ல தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications