கண்காணிக்கும் உளவுத்துறை.. தமிழக அரசு சுதாரிக்கணும்! கலவரத்திற்கு திட்டமிடும்.. தவெக டெலிகிராம் குழு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் பலர் கலவரத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போஸ்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தமிழ்நாட்டில் கலவரத்தை நடத்த வேண்டும் என்று டெலிகிராம் செயலியில் சில தமிழக வெற்றிக் கழக குழுவினர் போஸ்டுகளை செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. அடிக்கடி டிவிகளில் பேசும் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். ராஜ்மோகன், லயோலா மணி போன்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

கலவரத்தை தூண்டும் வகையில் போஸ்டுகள்
ஆதவ் அர்ஜுனா, அருண் உள்ளிட்ட பலர் வெளியே வரவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் சில இன்ஸ்டாகிராம் influencerகளை மட்டும் வைத்து போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தது. முக்கியமாக கலவரத்தை தூண்டும் வகையில், வதந்திகளை பரப்பும் வகையில் போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தனர்.
தற்போது அந்த போஸ்டுகளையும் அந்த இணைய பிரபலங்கள் டெலிட் செய்ய தொடங்கி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் கலவரத்தை நடத்த வேண்டும் என்று டெலிகிராம் செயலியில் சில தமிழக வெற்றிக் கழக குழுவினர் போஸ்டுகளை செய்து வருகின்றனர்.
கலவரத்தை தூண்டும் ஆதவ் அர்ஜுனா
கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜுனா செய்த போஸ்டில், சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனது தவறு என்று கூறியதோடு இல்லாமல்.. கலவரத்தை தூண்டும் விதமாக கடுமையாக போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் கடும் விமர்சனங்களை சந்தித்தது. மக்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசியல் கலவரத்தை தூண்டும் விதமாக அவர் போஸ்ட் செய்கிறார். இளைஞர்களை தூண்டிவிட்டு, கலவரத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார் என்று ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

கவனிக்கும் உளவுத்துறை
பின்னர் ஆதவ் அர்ஜுனா இந்த போஸ்டை டெலிட் செய்தார். இதற்கு இடையே டெலிகிராமில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சில போஸ்டுகள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இதில் போஸ்டுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது போக வாட்ஸ் ஆப்பிலும் அது தொடர்பான போஸ்டுகள் செய்யப்பட்டன.
இதைத்தான் தற்போது போலீசார், உளவுத்துறை கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது கலவரத்திற்கு திட்டமிடும் நபர்களை போலீசார் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற டெலிகிராம் குழுக்களையும் போலீசார் கடுமையாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் தமிழக அரசு உடனடியாக துரிதமாக செயல்பட வேண்டும். கலவரம் நடக்கும் நிலையை ஏற்படுத்த கூடாது. அது தமிழ்நாட்டை பாதிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், கலவரத்தை செய்தால் எதிர்காலம் மொத்தமாக போகும். இதனால் தமிழக அரசு உடனடியாக சுதாரித்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
-
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை!












Click it and Unblock the Notifications