தவெக My TVK செயலியை வடிவமைத்த.. பாஜக நிர்வாகியின் நிறுவனம்.. மாட்டிக்கிட்டாரே? இதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக இன்று வெளியிட்டுள்ள MyTVK செயலியை வடிவமைத்து கொடுத்த Samasthan infotech Private Limited நிறுவனம் பாஜக நிர்வாகிக்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாஜக நிர்வாகி நடந்தும் நிறுவனம்தான் இந்த செயலியை உருவாக்கியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று 'My TVK' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இது கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு கோடி குடும்பங்கள் மற்றும் உறுப்பினர்களைச் சேர்ப்பதே இலக்காகும்.

Tamilaga vetri kazhagam

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி: முக்கிய அம்சங்கள்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய் 'My TVK' செயலியைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலியில் ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட முடியும். இந்தச் செயலி மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகிக்கு நெருக்கம்

இந்த நிலையில் பாஜக நிர்வாகி நடந்தும் நிறுவனம்தான் இந்த செயலியை உருவாக்கியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக மில்டன் என்பவர் செய்த போஸ்டில், ஏன் நடிகர் விஜயை தவெகவை பிஜேபியின் கூட்டுக்களவாணி கபடதாரி என்கிறோம்.. இதோ ஆதாரம் தவெக இன்று வெளியிட்டுள்ள MyTVK செயலியை வடிவமைத்து கொடுத்த Samasthan infotech Private Limited நிறுவனம் யாருடையது தெரியுமா?

"மிகப்பெரும் கோடீஸ்வரரும் பிஜேபி பிரமுகருமான திரு. சுப்ரமணியம் முத்துசாமி உடையது." இவர் 2011 சட்டமன்ற தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியிலும் 2015ல் நடந்த ஶ்ரீரங்கம் இடைதேர்தலிலும் பிஜேபி வேட்பாளராக போட்டியிட்டவர். பிஜேபி கொள்கை எதிரினு எங்க கிட்ட பேசிட்டு கூட்டுக்களவானி வேஷம் போடுறீங்களே கபடதாரி விஜய் அவர்களே... "கொண்டைய மறைக்க மறந்துட்டீங்களே ப்ரோ", என்று விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு க்ரூக் பதிலடி

இந்த புகார் உண்மையா என்று சந்தேகம் எழுப்பிய விஜய் ரசிகர்களுக்கு க்ரூக் (grok) பதிலடி கொடுத்துள்ளது. அதில், மில்டன் சொல்வது உண்மை. MyTVK ஆப் Samasthan Infotech Pvt Ltd ஆல் உருவாக்கப்பட்டது. அதன் உரிமையாளர் சுப்ரமணியம் முத்துசாமி, BJP பிரமுகர்; 2011 மணச்சநல்லூர் & 2015 ஸ்ரீரங்கம் தேர்தல்களில் போட்டியிட்டவர். TVK-BJP தொடர்பு குறித்து சந்தேகம் உண்மை. ஆதாரங்கள்: MyNeta, ZaubaCorp., என்று எக்ஸ் நிறுவனத்தின் க்ரூக் (grok) பதில் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை

வாக்குச்சாவடி முகவர்கள், செயலியிலுள்ள வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜியோ மேப்பிங் தொழில்நுட்பமும் இந்தச் செயலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகிகள் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றுதான் உறுப்பினர்களைச் சேர்க்க முடியும்.

வேறு இடத்தில் இருந்து கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது. மேலும், உறுப்பினர் சேர்க்கையுடன், ஆதரவு தரும் நபர்கள் போன்ற விவரங்களையும் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்சியில் சேராமல் வெளியில் இருந்து ஆதரவு தருபவர்களின் விவரங்களையும் வாக்குச்சாவடி முகவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த செயலி, தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கட்சியின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க முடியும். இந்தச் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை இலக்கை அடைய முடியும். இந்த நடவடிக்கை கட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும். மேலும், கட்சி தொண்டர்களிடையே ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த உதவும். இந்த அமைப்பு கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+