சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க?.. அப்பறம் எப்படி சிரமங்களை சரி செய்ய முடியும்.. தமிழிசை சலிப்பு

வங்கி ஊழியர்கள் போராட்டத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Nirmala Sitharaman Pressmeet

    சென்னை: "ஏன் இப்படி போராட்டம் பண்றீங்க? வங்கி இணைப்புக்கு போராட்டம் பண்ணினால் அப்பறம் எப்படி பொருளாதார சிரமங்களை சரி செய்ய முடியும்" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு " அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

    10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என்று நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    இப்படி வங்கிகள் இணைக்கப்படுவதால் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், வங்கி ஊழியர்கள் சங்கம் நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என எல்லாருக்குமே நல்லதுதான் அமையும் என்று பல காரணங்களை சொன்னதுடன், இதன்மூலம் ஊழியர்களக்கு வேலை வாய்ப்பு இழப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தையும் தந்தார்.

    10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்!10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்!

     வங்கி சேவை

    வங்கி சேவை

    ஆனாலும், வங்கி இணைப்புக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எங்களுக்கு இப்படி இணைப்பே தேவையில்லை, லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை இல்லாத நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு தேவைதானா என்றும், உடனடியாக அதை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்துள்ளன.

     அறிவிப்பு

    அறிவிப்பு

    இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தமிழிசை சவுந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவாக, மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும், அறிவிப்பினையும் செய்தால், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்பதுதான் மாநில பாஜகவின் இன்றியமையாத கடமையாக உள்ளது.

     இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    நீட், இந்தி திணிப்பு உட்பட மக்களை பாதிக்கும் எதுவானாலும், அதற்கு தங்கள் தரப்பு கருத்தினையோ, எதிர்மறை விமர்சனத்தையோ கட்சி சார்பாக யாருமே முன்வைப்பது இல்லை. அந்த வகையில், வங்கி இணைப்புக்கும் தமிழிசை சவுந்தராஜன் வரவேற்புதான் தந்துள்ளார்.

    சிரமங்கள்

    இது சம்பந்தமாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், "வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்? பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஏமாற்றம்

    இதற்கு வழக்கமாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வரவேற்றும், எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் கேட்டுள்ளார், "என்னாது பொருளாதார சிரமமா???? நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்றெல்லாம் சொன்னீங்களே அக்கா!! உங்களையும் ஏமாத்திட்டாரா மோடி" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    TN BJP Leader Tamilisai Soundarajan condemns bank staffs strike announcement in banks merging issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X