"உருட்டு கடை அல்வா.." மக்களுக்கு திமுக கொடுத்தது இதைதான்! கையில் கவருடன் வந்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தமிழக மக்களுக்கு திமுகவால் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வ் விமர்சித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தீபாவளியன்று 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின், 10 சதவிகித அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை என்றும், அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சில மணி நேரம் தாமதமாக வந்தனர். அதன்பின் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறிய, ஒரு அல்வா கவரை கொடுத்தார். அதில் திமுகவின் உருட்டு கடை அல்வா என்று அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல் மாதந்தோறும் மின் கணக்கீடு வாக்குறுதி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு தீபாவளியின் போது தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 525 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10 சதவிகித வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இதையடுத்து காலி அல்வா பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் கொடுத்தார்.
இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் அதிமுகவின் செயல்பாடுகள் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஏனென்றால் கரூர் விவகாரம் தொடர்பான விவாதத்தன்று கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்து விவாதம் நடத்தினர். தொடர்ந்து கிட்னி திருட்டு விவகாரத்தின் போது, கிட்னிகள் ஜாக்கிரதை என்ற ஸ்டிக்கரை சட்டையில் ஒட்டி சட்டசபைக்கு வந்தனர்.
தற்போது திமுகவின் வாக்குறுதிகளை கேள்வி எழுப்பி உருட்டு கடை அல்வா என்று அச்சிட்டு காட்டி இருக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில், சட்டசபை செயல்பாடுகளும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications