சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்த்திகேய சிவசேனாதிபதி மீது அதிமுகவினர் தாக்குதல்.. ரிப்போர்ட் கேட்கும் தேர்தல் அதிகாரி.. விசாரணை!

Google Oneindia Tamil News

சென்னை: தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை அதிமுகவினர் தாக்க முயன்றதாக வைக்கப்பட்ட புகார் குறித்து தேர்தல் ஆணையம் ரிப்போர்ட் கேட்டுள்ளது.

தொண்டாமுத்தூரில் உள்ள செல்வபுரம் அரசு பள்ளியில் கார்த்திகேய சிவசேனாதிபதியை அதிமுகவினர் தாக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக திமுகவினர் தற்போது தொண்டாமுத்தூரில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இங்கு உள்ள வாக்குச்சாவடிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி ஆய்விற்காக வந்த போது அவரின் காரை தாக்க முயன்றதாகவும், அவரை பள்ளிக்குள் சிறை வைக்க முயன்றதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

 திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சிறைப்பிடித்து.. அதிமுகவினர் தாக்க முயற்சி.. பரபரப்பு திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சிறைப்பிடித்து.. அதிமுகவினர் தாக்க முயற்சி.. பரபரப்பு

கோவை

கோவை

இது தொடர்பாக கார்த்திகேய சிவசேனாதிபதி கோவை ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் வைத்துள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் வைத்துள்ளார். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் விவகாரம் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாஹு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கலவரம்

கலவரம்

அதில் தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. பெரிதாக எங்கும் பிரச்சனை இல்லை . எந்த இடத்தில் இருந்தும் புகார் வரவில்லை. தொண்டாமுத்தூர் குறித்து ரிப்போர்ட் கேட்டு இருக்கிறோம்.

விசாரணை

விசாரணை

இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். ஆனால் அங்கு நடந்த சம்பவம் அவசரமாக விசாரித்து , முடிவு எடுக்க வேண்டிய ஒன்று அல்ல. அதனால் ரிப்போர்ட் வந்த பின் முடிவை எடுப்போம், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தது.

புகார்

புகார்

இது தொடர்பாக புகார் வந்தது. தற்போது எதுவும் பிரச்சனை இல்லை. அனைத்தும் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை வாக்குப்பதிவு நன்றாகவே நடந்து கொண்டு இருக்கிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

English summary
Tamilnadu assembly elections: ECI seeks report on attack on DMK Sivasenathipathy in Thondamuththur today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X