நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: பிரபல நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வருபவர் அர்ஜுன். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து உள்ளார்.

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி. 85 வயதாகும் இவர், உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஜூலை 23ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
பெங்களூருவில் அர்ஜுனின் சொந்த ஊரான ஜக்குநல்லியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
லட்சுமி தேவியில் உடல் ஊரில் இருக்கும் தோட்டத்தில் அர்ஜுனின் தந்தை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அர்ஜுனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "''நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.
தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications