சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எல்லோரும் வந்தாக வேண்டும்".. பறந்த ஆர்டர்.. முதல் நாளிலேயே ஸ்டாலின் முக்கிய மீட்டிங்.. என்ன பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்றதும் முதல்வர் ஸ்டாலின் முதல் நாளிலேயே அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். முக்கியமான 3 விஷயங்களுக்காக அவர் கூட்டத்தை நடத்த போவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார். ஆளுநர் மாளிகையில், பெரிய கொண்டாட்டங்கள் இன்றி, சிறிய அளவில் பதவி ஏற்பு விழா நாளை நடக்க உள்ளது.

 அடுத்த அதிர்ச்சி.. அரைமணி நேரத்துக்கு ஒருவர் அடுத்தடுத்து பலி.. திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்' அடுத்த அதிர்ச்சி.. அரைமணி நேரத்துக்கு ஒருவர் அடுத்தடுத்து பலி.. திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்'

கொரோனா காலம் என்பதால், பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது. முக்கியமாக இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி, இறப்புகளை குறைத்து, கொரோனா கிராபை சரிய வைக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்றதும், முதல் னாலே அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். இதில் ஸ்டாலின் தேர்வு செய்ய போகும் புதிய நிர்வாகிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுக்கு "மீட்டிங்" அழைப்பு பறந்துள்ளது.

காரணம் 1

காரணம் 1

மொத்தம் மூன்று முக்கியமான காரணங்களுக்காக இந்த மீட்டிங் நடக்கிறது. அதன்படி முதல் விஷயம் கொரோனா பரவல். தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்த 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்துவது எப்படி என்று திட்டங்களை வகுக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். முக்கியமாக இரண்டாம் அலை மிக வேகமாக பரவுகிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

மருத்துவமனைகளில் பெட்கள் எவ்வளவு உள்ளது, ஆக்சிஜன் நிலவரம், மத்திய அரசு அனுப்பும் மருத்துவ உபகரணங்கள் என்று பல விஷயங்களை குறித்து ஆலோசிக்க உள்ளனர். முக்கியமாக ஆக்சிஜன் அளவு குறித்து ஆலோசிக்க உள்ளனர். நாளை நடக்கும் இந்த மீட்டிங்கிலேயே கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

காரணம் 2

காரணம் 2

இதுபோக இரண்டாவதாக தமிழகத்தில் வேக்சின் டிரைவ் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். மக்களுக்கு அதிக வேகமாக வேக்சின் கொடுப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். வேக்சின்களை வீடு வீடாக வழங்குவது, கிராமங்களில் வழங்குவது என்று பல்வேறு திட்டங்களை இந்த ஆலோசனையில் வகுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் 3

காரணம் 3

மூன்றாவதாக தமிழக நிதிநிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி தேவை. தற்போது தமிழக அரசோ பெரிய கடனில் உள்ளது. கடனை சமாளித்து, நிதியை மீட்டு, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்கான திட்டங்கள் தன்னிடம் ஏற்கனவே இருப்பதாக ஸ்டாலின் கூறிய நிலையில், அது தொடர்பாகவும் நாளை ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.

English summary
Tamilnadu CM elect Stalin will hold a meeting with ministers after sharing in on Covid 19 control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X