• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனியர் அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு- வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல அட்வைஸ் செய்த சி.எம்.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளால் விமர்சிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் என்ற பெயரில் மறைமுகமாக அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், 'சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்' எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.

அலட்சியம் வேண்டாம்..தூசுக்கு கூட இடம் தரக்கூடாது.. கண்டிப்பான கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் அலட்சியம் வேண்டாம்..தூசுக்கு கூட இடம் தரக்கூடாது.. கண்டிப்பான கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

உடல்மொழி, அணுகும் முறை

உடல்மொழி, அணுகும் முறை

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.

கடும் நடவடிக்கை எடுப்பேன் என வார்னிங்

கடும் நடவடிக்கை எடுப்பேன் என வார்னிங்

மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன் என கூறியிருந்தார்.

 புழுதி- எதிர்ப்பு புயல்

புழுதி- எதிர்ப்பு புயல்

மேலும் ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால், மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி - ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

 கடிதத்தின் பின்னணி என்ன?

கடிதத்தின் பின்னணி என்ன?

இந்த கடிதத்துக்கு சில பின்னணிகள் இருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத் தரப்பினர். அதாவது, மக்களிடம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அல்லது ஆட்சிக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் வகையில் அல்லது சர்சைகளை ஏற்படுத்து வகையில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரின் பேச்சுக்களும் செயல்களும் கடந்த ஒரு மாதத்தில் அதிகமாக இருக்கிறது. அதிகரித்தும் வருகிறது. மூத்த அமைச்சர்களின் பேச்சுக்களிலேயே அத்தகைய கண்ணியம் குறைந்திருப்பதாகவும், மக்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதாகவும் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்தே இருப்பதால், அவர்களை எப்படி கண்டிப்பது என கவலை கொள்கிறாராம். மேலும், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இத்தகைய செயல்களால், முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கபப்டும் திட்டங்கள், அறிவிக்கப்படும் அறிப்புகள் மக்களிடம் போய்ச் சேர்வதில் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, அரசின் அறிவிப்புகள், அமைச்சர்களின் சர்ச்சையான பேச்சுகளால் மறைந்து விடுகிறது. அமைச்சர்களின் நக்கலான பேச்சுகளும் உரைகளும் தான் மக்களிடம் எளிதில் சென்றடைவதால் அரசின் திட்ட அறிவிப்புகள் பின் தங்கி விடுகின்றன என்று உளவுத்துறையும் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்துதான், தொண்டர்களுக்கு எழுதுவது போல, அமைச்சர்களுக்கு நயத்தகு வகையில் புரியும்படி கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய திமுகவினர்.

English summary
Tamilnadu Chief Minister MK Stalin has warned to Senior Minister's behaviour with the People.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X