சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு முழுவதும் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.. அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 18 வருடங்களாகவே போலியோ இல்லாத நிலைமை உள்ளது.. இதற்கு காரணம் தமிழகஅரசு எடுத்து வரும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும்தான்.

இனி வரும் காலங்களிலும் போலியா பாதிப்பு குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளும் அக்கறையில் அரசு ஈடுபட்டு வருகிறது.. இதற்காகவே, வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆப்கானில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு போலியோ தடுப்பூசி..மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்ஆப்கானில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு போலியோ தடுப்பூசி..மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

அறிவிப்பு

அறிவிப்பு

ஆனால், இந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது... தற்போது, தமிழகம் முழுவதும் வருகிற 27 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது... இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

 போலியோ சொட்டு மருந்து

போலியோ சொட்டு மருந்து

அதில், "தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

முகாம்கள்

முகாம்கள்

விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன் முகாமுக்கு வரும்போது, என்னென்ன விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முதல் சொட்டு மருந்து வழங்கப்படும் நேரத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

குறிப்பாக, "சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெறும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயம்.பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்/இருமல் அல்லது மற்ற தொற்று கொரோனா தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது. சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government announces, Polio vaccination camp from Feb 27th across Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X