சென்னையில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி.. எப்போது மினி பஸ் சேவை தொடங்கும்? எந்த ரூட்களில் இயங்கும்?
சென்னை: சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கி போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் உள்ள தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
சிறந்த போக்குவரத்து வசதி உள்ள நகரம் மற்றும் கிராம் ஆகிய இரண்டும் நல்ல வளர்ச்சியை பெறும். அந்த வகையில் இருசக்கர வாகனங்கள் இல்லாத காலங்களில் மக்களின் போக்குவரத்திற்கு மினி பஸ் சேவைகள் முக்கிய பங்கு வகித்தது. முக்கியமாக கிராமப்புறங்களில் மினி பஸ் சேவைகள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மினி பஸ் சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசு பேருந்துகளுக்கு மட்டுமே புதிதாக பெட்மிட் மற்றும் ரூட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்தன. அதேநேரம் சென்னை நகருக்குள் மட்டும் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சாலை போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதன்பின் புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி தரப்பில், 70 சதவிகிதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும், 30 சதவிகிதம் பேருந்து வசதியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த மினி பஸ் திட்டம் செயல்படுத்த மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையின் முக்கியப் பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே அரசு தரப்பில் மினி பஸ்களை பல்வேறு பகுதிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மம்னலி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் வசதிக்காக தனி மினி பஸ்களை இயக்க உள்ளது. இந்த தனியார் மினி பஸ் சேவை அடுத்த மாதம் முதல் சென்னையில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தரப்பில் போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications