இந்த 5 மாநகராட்சி ஆணையர்கள்.. உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: கோவை, மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஜூன் மாதம் தொடங்கி மட்டும் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் அளித்து உத்தரவிட்டுள்ளது. கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்
இது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்:
கோவை மாநகராட்சி புதிய ஆணையர் - ராஜகோபால் சுங்கரா & மதுரை மாநகராட்சி புதிய ஆணையர் - கே.பி.கார்த்திகேயன்
திருப்பூர் மாநகராட்சி புதிய ஆணையர் கிராந்திகுமார் & சேலம் மாநகராட்சி புதிய ஆணையர் - கிறிஸ்துராஜூ
திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையர் -விஷ்ணு சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துணை ஆணையர்கள் மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி:
பிரசாந்த் ஐஏஎஸ் - சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்)
நர்னவாரே மணிஷ் சங்கரா - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்)
டி. சினேகா - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி)
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை மாநகராட்சி தெற்கு பிராந்திய துணை ஆணையராக சிம்ரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூடுதல் கலெக்டர்கள்
மேலும், மாநிலத்திலுள்ள கூடுதல் கலெக்டர்களுக்கும் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி
பவன்குமார் - கடலூர், கூடுதல் கலெக்டர், திட்ட அலுவலர் & ரஞ்சித் சிங் - கடலூர் கூடுதல் கலெக்டர்(வருவாய்)
சரவணன் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் இயக்குநர் & ஸ்ரீகாந்த் - தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) திட்ட அலுவலர்
வைத்தியநாதன் - தர்மபுரி கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பின் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் பணியிடமாற்றம்
பிரதாப் - திருவண்ணாமலை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) & தினேஷ் குமார் - திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)
சரவணன் - தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) & சேக் அப்துல் ரஹ்மான் - சேலம் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)
பிரதிக் தயாள் - ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) & சுகபுத்ரா - தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி)
அனு - தமிழ்நாடு அரசின் துணை செயலர் & இளம்பாஹாவத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கூடுதல் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications