ஏழை எளிய எழுத்தாளனுக்கு சர்வதேச அங்கீகாரம்! - ஸ்டாலின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி
சென்னை: இப்படி ஒரு புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. சர்வதேச அளவில் உள்ள பல பதிப்பகங்கள் சென்னைக்கு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு, தமிழில் உள்ள பல படைப்புகளை வேறு மொழிக்குக் கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளார்கள். அந்தளவுக்குத் தடபுடலாக நடந்து முடிந்துள்ளது சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி.

இந்த விழா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதோ இப்போது அறிவுலகத்திலும் உலக அளவில் தனது சிறகை விரித்துள்ளது தமிழ்நாடு. இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது 46 ஆவது புத்தகக் கண்காட்சி. இத்தனை ஆண்டுகளில் நடக்காத ஒன்று இந்த ஆண்டு நடந்துள்ளது. அதுதான் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி.

பதிப்புத்துறை பெரியதாக வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் ஏங்கல்ஸ், லெனின், அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டவர் பெரியார். உலக அறிவை அனைத்தையும் தமிழிலேயே அளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அத்தகைய முன்னோடிகளின் விருப்பத்தின் அடையாளம்தான் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி நடக்கின்றபோது இதைப் போன்ற புத்தகக் காட்சி நடப்பது ஒன்றும் வியப்பல்ல. இலக்கிய செழுமை மிக்க தமிழ்ப்படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லவும், உலகு எங்கிலும் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழ் மொழிக்குக் கொண்டுவரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.

'தினம்தோறும் திராவிடம்' என்ற திட்டத்தின் கீழ், 25 நூல்களும் 'முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ், 46 நூல்களையும் 'இளந்தளிர் இலக்கிய திட்ட'த்தின் கீழ், 59 நூல்களும் சங்க இலக்கிய வரிசையில் பத்துப்பாட்டு நூல்களும் முன் வெளியான கலைக்களஞ்சிய ஆவணப்பதிப்பும் நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் 2 படைப்புகளும், வ.உ.சி.யின் நூல் திரட்டாக 2 நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்ட வரிசையில் 17 நூல்களும் ஆக மொத்தம் 173 நூல்களை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளோம். இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் செய்துள்ளோம்.
அதேபோல மருத்துவத் துறைசார்ந்த பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம். தந்தை பெரியாரின் சிந்தனைகளை இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளையும் சேர்த்து 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட உள்ளோம். அதேபோல் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டு வர உள்ளோம். இந்த சர்வதேச புத்தகக் காட்சியை ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்துள்ளோம்" என்று வியப்புறப் பேசி இருக்கிறார்.

இந்தப் புதிய முயற்சி பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், "மிகச் சிறப்பாக இந்த சர்வதேச அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் நுழைவாயிலில் நமது தமிழ் மொழியின் பெருமையான திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்த்து வைத்துள்ளார்கள். அதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழி மட்டுமல்ல; அது வாழ்க்கை. அதை உணர்ந்து நாம் வேறு மொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழை உலகத்திற்குக் கொண்டு செல்வதைப் போலவே, உலகத்தில் உள்ள படைப்புகளைத் தமிழ்மொழிக்குக் கொண்டு வருவோம். அதுதான் திமுக அரசங்கத்தின் முக்கியத்துவமாக இருக்கிறது.

தமிழ்நாடு என்று திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணா பெயரை வைத்ததிலிருந்து திமுகவின் தமிழ்ப் பணி என்பது துவங்குகிறது. எங்கள் மொழிக்கு 3500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்கள் எழுத்து வடிவத்தில் உள்ளன. 'உங்களுக்கான கருத்தை எங்கு இருந்து பெற்றீர்கள்?' என்று லியோ டால்ஸ்டாய்க்கு காந்தி கடிதம் எழுதிக் கேட்கிறார். அதற்கு டால்ஸ்டாய், ' நான் இந்தியாவில் பேசப்படும் மொழியான தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளில் இருந்துதான் பெற்றேன்' என்கிறார்.

அந்தளவு பெருமைமிக்கது தமிழ் இலக்கியம். ஆகவே வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவர்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் உங்கள் இலக்கிய செல்வங்களைக் கொண்டுவாருங்கள். நாங்கள் எங்கள் இலக்கிய செல்வங்களைத் தருகிறோம்' என்று. அதை உணர்ந்துதான் தமிழ் மொழியில் இருந்து வேறு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படைப்புகளுக்குத் தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.

அதை முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து தந்துள்ளார். அதற்கான பல முயற்சிகளை எடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். அவர் இதற்காக ஃப்ராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அதற்கான முன் திட்டங்களை பெற்று வந்துள்ளனர். அதோடு அதைச் செயல்படுத்தியும் உள்ளனர்" என்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கலைஞர் வழியில் ஒரு அறிவு புரட்சியைச் செய்ய வேண்டும் என்றால், இதைப் போன்ற சர்வதேச புத்தகக் காட்சியை நடத்த வேண்டும். ஆகவேதான் முதலமைச்சர் ஸ்டாலின், 'செஸ் ஒலிம்பியாட் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டிற்கு மட்டும் நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அறிவுசார்ந்த சமூகத்தினை உருவாக்க வேண்டும்' என்றார். அதை வைத்து யோசித்து உருவாக்கியதுதான் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி.

"அதற்காக நானும் சார்ஜா, துபாய் போன்ற புத்தக சந்தைக்குச் சென்றேன். அதற்கு முன்பாக ஃப்ராங்ஃபர்ட் புத்தக சந்தைக்கு நமது அரசு சார்பாக அதிகாரிகள் சென்றார்கள். அதைக் கொண்டு மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் இந்தச் சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை நடத்தத் திட்டம் வகுத்தோம். பல சர்வதேச புத்தக வெளியீட்டாளர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். கிட்டத்தட்ட பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற 30 நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் சென்னை வந்துள்ளனர். வரும் காலங்களில் இதைவிட அதிகமான பதிப்பாளர்கள் வர வைக்க உள்ளோம்" என்கிறார்.
"இந்த மாதிரியான ஒரு சர்வதேச புத்தகக் காட்சி என்பது தமிழ்நாட்டிற்குப் புதிது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக நடக்கிறது. அதாவது ஃப்ராங்ஃபர்ட் புத்தக சந்தையை முன்மாதிரியாக வைத்து நடத்துகிறார்கள். ஆகவே இது கண்காட்சி என்பதைத் தாண்டி ஒரு சர்வதேச அளவில் படைப்பை பரிமாறிக் கொள்வதற்கான சரியான களம். ஆகவே இது தனித்துவமான முயற்சி. இந்த ஆண்டு ஒரு தொடக்க முயற்சிதான். அந்த முயற்சியே நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது" என்கிறார். இவரது படைப்புகள் இந்திய மொழிகளில் மட்டும் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு மொழியாக செக், ஜெர்மன், இத்தாலி, போலிஷ் எனப் பலமொழிகளில் சென்றுள்ளன. ஆகவே இன்றைக்குப் பெருமாள் முருகன்தான் தமிழை பொருத்தவரை சர்வதேச எழுத்தாளராக இருக்கிறார். இவரது 'பூனாச்சி' நாவல்தான் அந்த அங்கீகாரத்தை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. அதேபோல் 'மாதொரு பாகன்' நாவல் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்புகள் கொண்ட படைப்பாளி பெருமாள் முருகன், இந்தக் கண்காட்சியை தனக்கு அளித்துள்ள உத்வேகம் அளவிட முடியாதது என்கிறார்.
இவர் அளவுக்கு அறியப்பட்ட எழுத்தாளர் இல்லை கவிஞர் இசாக். ஆனால், அவர் இந்தக் கண்காட்சி தனிப்பட்ட வகையில் தனக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்கிறார். காரணம், இசாக் தனது 'மணல் உரையாடல்' நூலை மலேசிய மொழிக்குக் கொண்டு செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். 'என்னைப் போன்ற வசதி வாய்ப்புகள் அற்ற எழுத்தாளர்கள் உலக அளவில் நடைபெறும் பன்னாட்டு கண்காட்சிக்குச் சென்று புரிந்துணர்வு போடுவது இயலாத காரியம். ஆனால் அரசு அப்படியான ஒரு வாய்ப்பை தமிழ்நாட்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்ததால், நானும் என் படைப்பை வெளிநாட்டு மொழிக்கு கொண்டு செல்ல ஒப்பந்தம் போட்டுள்ளேன். இந்த மாற்றம் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்தது. அந்த வகையில் இது ஏழை எளிய எழுத்தாளனுக்கும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்துள்ள கண்காட்சி" என்கிறார்.
இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்குப் பின்புலமாக இயங்கியவர் ஆழி செந்தில்நாதன். அவரிடம் இந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதைப் பற்றிக் கேட்டோம். அவர், "முதல் முயற்சியே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மொழியிலிருந்து உலக மொழிக்கு 90 நூல்களைக் கொண்டுசெல்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதேபோல தமிழிலிருந்து பிற இந்திய மொழிக்கு 60 நூல்கள் மொழிபெயர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உலக மொழிகளிலிருந்து 170 நூல்கள் மொழிபெயர்க்கப்பட உள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன. வேறு சில ஒப்பந்தங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 365 படைப்புகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கைகளைக் கொண்டு நாம் மயங்கிவிடக் கூடாது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழு நூல்களாக ஆகும் வரை நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிடைக்கும்" என்கிறார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications